58 அவையடக்கம் (அறுசீர் விருத்தம்) அவைக்கையை நீட்டி நீட்டி அணைக்கின்ற நெய்தற் பெண்ணின் கொலைக்கண்ணும் நீலம் நெய்தல் குளிர்மலர்த் தேனை உண்டே சவித்திட்ட அறுகாற் புட்கள் தாழையில் துயிலும்! ஆன்ருேர் நிலைத்திடு புதுவைக் கென்றன் நெடுவாழ்த்து! வணக்க மாமே! (கலிவெண்பா) சித்திரைத் திங்களைக் கண்டேன்; திகைத்தேன்நான்! புத்தரைப் போலப் புறப்பட நான் நினைத்தேன்! ஊர்தீய்க்கும் வெய்யில் உடல் தீய்க்க, மேனியிலே வேர் தீய்க்கத் திண்ணை வெளியினிலே வந்தேன்நான்! வெப்பத்தி ளுேடுநல் வெய்யோன் சுடுமண்ணை அப்பியது காற்றும்! அடடா! இதுவென்ன? ‘தென்றல் தவழும் திருநாட்டில் வாடைவந்து மன்றல் புரிந்த வளம்போலும் என்று நான் எண்ணி இருக்கின்ற வேளையிலே, என் மனைவி திண்ணை அருகில் சிரித்துமுகம் காட்டிநின்ருள்! கொல்லன் உலைபோல் கொதிக்கின்ற மேல்வானில், இல்லை|இல்லை! என்மனம்போல் மேல்வான் எரிமூழ்க ஆழ்கடலில் கன்னி அழுத்த உருள்செப்புத் தாழிபோல் வெய்யோன் தலைமறைத்துக் கொண்டிருந்தான்! ‘என்னத்தான்! என்னத்தான்' என்றகுரல் கேட்டேன்! கன்னங் குழிவீழ்ந்த கார்க்கூந்தல் என்மனவி
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/59
Appearance