உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பண்டைத் தமிழர் பயின்ற மொழிவளத்தைக்
கொண்டுவந்துசேர்ப்பேன்! குறுக்கிட்டால் கொல்வேன்நான்!

ஆடலிற் பாடலில் ஆன்ற உரைநடையில்
கேடெங்கு நேர்ந்தாலும், திங்களே! செந்தமிழே!

வான்மின்னல் போலக் கவிதை வயிரவாள்
மானே! உறை நில்லா! மக்களுறை நில்லாதே!

தேன்கொழிக்கச் செய்வேன்; திருநாட்டில் எத்துறையும்
ஈன மிலாமல் நான் ஏற்றமுறச் செய்வேன்;

செழுமை நிறைந்த, திறமை மிகுந்த,
முழுமை அறிவடைந்த, மூதறிஞர் வாழ்கின்ற

நன்னாடாம் நாம்வாழும் இந்நாட்டை என்றுமே
பொன்னாடாய்ச் செய்வேன்; புதுமை பலகொணர்ந்து

ஆக்கப் பணிபுரிவேன்! ஆசான்மேல் ஆணையிது!
தேக்கு மரச்சிலையே! தீட்டாத ஓவியமே!

காசு கொடுநீ கவியரங்கம் போக!' என்றேன்!
மாசில்லா வீணை மனையாட்டி கண்கலங்கிப்

'பேசுவீர்! உங்கள் பிழைப்பே இ(து)!' என்றாள்!
'காசறு பொன்னே! களிவண்டே! இன்றுல்கைப்

பேச எழுப்பும் பெரும்பணியே நம்பணியாம்!
ஆசை மனையாட்டி! அஃதேநம் வேலையடி!

காசைக் களைவோம்நாம்! காசைப் பொதுசெய்வோம்!
மீசை எனக்கில்லை! மீசை முறுக்குடைய

ஆசானின் உள்ளம்! அதுபோதும், போதுமடி!
பேசாமல் என்னைப் பிரிய விடுகுயிலே!

இன்னுங்கேள்: காதுக் கணியாம் வயிரமணி
பொன்னும் பொருளும் புதுவாழ்வும் மக்கட்கே