உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

(கலிவெண்பா)

‘சென்னை நகர்நோக்கிச் செல்கின்றேன்’ என்றேன் நான்!
புன்னை மலர்வண்டுப் பூங்கண் மனையாட்டி,
‘என்னையும்...’ என்றாள்! இடைமறித்(து), ‘என்னன்பே!
பொன்னணிகள் இல்லையே; புத்தாடை வேறில்லை;
கையிற் செலவுக்குக் காசில்லை; கேட்டாலும்
பொய்யுரைப்பார் அன்றிப் பொருள் கொடுப்பார் இல்லையடி!’
என்றுரைத்தேன்! வானத் திடையெழுந்த கார்முகிலில்
சென்ற மதிபோல் சிரித்தமுகம் மாறினளே!
அண்ணாவைப் பாடும் அவையிருந்து கேட்பதற்குப்
பெண்ணாள் நீ கேட்கின்ற பேறில்லை! பேச்சாளர்,
அண்ணாவோர் நாடக ஆசிரியர்! அஃதுண்மை!
பெண்ணே!என் பேரில்லப் பெண்ணரசி! நீவாய்த்த
பேற்றை நினைக்கப் பெருஞ்சிரிப்பாம்! நம்வீட்டுச்
சோற்றைப் பகிர்ந்துண்ணும் சொந்த மகளின்
வழிவந்த மாற்றுச் செழும்பொன்னாம் பொன்னி6
வழிச்செல்வம் போதாவோ? வேறென்ன வேண்டுமடி?
பூக்குழலி இல்லத்துப் பொன்வண்டாம் நம்பிள்ளை
நாக்குழறிப் பாடி நகைமுகத்து நீலவிழி
நோக்கால் உடலை நொடிப்பதைப் பார்த்திருப்பாய்!
நோக்கந்தான் என்னவாம்? நோக்கம் குழந்தை
மனக்கருத்தைப் பெற்றோர் மனம்பதிய வைத்துத்
தனக்குரிய கொள்ளும் தகைமைத்தாம்! அஃதேபோல்
நாட்டகத்து மக்கள் நலிவை, இழிசெயலை

நாட்டகத்துச் சான்றோர் நசுக்கி ஒழிக்கவே