பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 நாடக ஆசிரியர் நம்மண்ணு அன்றியிங்கே ஏடெழுது வோரில் எவருள்ளார்? இல்லை! தனித்தலைவர் நம்மண்ணு நாடகத் தந்தை! இனிப்பிறப் பார்யாரே? இலவே யிலையென்பேன்! கந்தனின் வாழ்க்கைக் களியாட்டம், வானுலக மைந்தனின் வாழ்க்கை, மறுபிறப்(பு) என்றெல்லாம் நாடகத்தில் முன்பு, நடுத்தெருவில் நம்மவர்கள் ஆடுவதே மேன்மைக் கலையென்று கண்டோம்! தமிழகத்தில் இந்தத் தறிதலை யாட்டம் தமிழக வாழ்வி னிடையில் தழைக்கப் புகுத்திர்ை|கண்டே புழுங்கினர் அண்ணு வகுத்தார் புதுவழி! மக்கள் மனங்கவர் வேலி இழந்த விளைபயிர்போல் தென்னகத்தே தாலி இழந்தாள் தவிப்பு, தனியிருப்பு, நாகூர்க் கடவுளுக்கு நாம்வளர்க்கும் ஆட்டினைப்போல் ஆகாச் செயல்புரிவோர் அம்பலத்தி லேநிறுத்தி மக்கள் மனத்திரையை மாற்றியதே அண்ணுவின் சுக்கு மருந்தாகும் தூயதமிழ் நாடகங்கள்! குப்பன் படுங்கொடுமை, கூலிக் குழைத்துவரும் அப்பன் கொடுமை,நல் லாண்டான் கொடுமையொடு, ஐயர் கொடுமை, அறச்சாலை உள்ளிருந்து மெய்யெல்லாம் வெண்ணிறு, மேலுலகம் கீழுலகம், சாதி உயர்வு, தனியுரிமை, சொத்துரிமை ஆதி முதலே அமைந்ததுவாம் என்றுரைத்தே ஏய்த்துவந்த கூட்டத் திழிசெயலே, நாடகத்தில் வாய்த்த இடமெல்லாம் வாதாடும் வீரன்போற் 5