பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

இன்று நாம் வாழும் எழில்சேர் உலகமே
என்றே அறிஞர்கள் எண்ணலா னாரே!
நிலந்தீ வளிவான் மழையெனும் ஐந்தும்
கலந்த துலகெனக் கண்டனர் மேலோர்!
வடமுனை தென்முனை மாற்றம் அடைய
நடுமுனைப் பூமி நலம்பெற் றதுவே!
நடுமுனையில் நாம்வாழ் தமிழகம் உண்டாம்!
கடல்கொடு போனது காலவெள்ளத்தால்!
உலகப் பெருவெளி உள்ள நடுப்பால்
மலைகள் எழுந்தன; வான்மழை தேங்கின;
கல்லும் உடையக் கடலும் கலக்கவே
புல்லும் புதுப்புதுப் பூண்டும் முளைத்தன!
வாழும் உயிர்கள் வளர வளரப்பின்
சூழும் விலங்கும் தமிழனும் தோன்றினான்!
தென்னகத் தோனே நம் சீர்சால் தமிழனாம்!
அன்னோன் புகழை அளவிடல் கூடுமோ?
காட்டில் அலைந்தான்; கனியையும் காயையும்
ஈட்டினான்; உண்டான்; இணையை அடைந்தான்;
குளிரை மழையைக் குகைவழி வென்றான்;
களிற்றை எதிர்த்தான்; கடும்புலி கொன்றான்;
நெருப்பை மலையில் நிமிர்ந்த கழையின்
உரைப்பிடைக் கண்டான்; உயிரினை ஓம்பும்
செறுப்படை கண்டான்; செழுமையாய் வாழும்
பொறுப்பினைக் கொண்டான்;செம் பொன்னிகர் [மக்கள் தம்
வாயைத் திறந்து வருமொலி கேட்டபின்

தாயையும், தாய்தரு தன்னருஞ் சேயையும்