72
கண்டான்; களிகொண்டான்; கைக்குழந்தை [வாய்மொழியில்
கொண்டான்;பே ரின்பம்! குழந்தை பிறந்தவுடன்
அண்டை அயலில் அழகுத் திருமகனும்
வண்டைப்போல் வாழும் வழிக்கு வகைநினைத்தான்!
அன்பு பிறந்ததுவாம்! அஃதே உயிரியக்கம்!
வன்பென்ற சொல்வே வழக்கழிந்து போகாதோ?
தெம்புக்கோ நல்லுணவு! செஞ்சொல் மனையாட்டி
அம்பொத்த கண்கள் அதனால் விளைந்தனவாம்!
கூரைக் குடிசைக் குழவியின் நல்வாழ்வு
பாரைத் திருத்தும் பணியெனவே ஆண்மை
யுடைய தமிழன் உழைத்தான்; உயர்ந்தான்;
கடைவாய் இளஞ்சிரிப்புக் கைக்குழந்தைப் பூவாயின்
செஞ்சொல் அடைத்தேன் எனமகிழ்ந்தான்; அச்சொல்லை
நெஞ்சில் நினைத்தான்; நிலைபுகழை நாட்ட
ஒலிக்கேற்ற நல்ல உருவை அமைக்கப்
பலகுரலைக் கேட்டான்; பழகுதமிழ்ச் செஞ்சொல்
ஒலிக்குறிப்புக் கேற்ற உருவாம் எழுத்தைக்
கலக்க முயன்றான்; முதல்சார் பெழுத்தெனும்
முப்ப தெழுத்தே மொழிக்கு முதலென
இப்பா ருலகிவ் இயம்பினன் என்பேன்!
மொழியின் பிறப்பை, மொழிதரு மூக்கு
வழியின் பிறப்பை வகுத்தான் தமிழன்!
அழகினைக் கண்டான்; அழகின் பெருக்கால்
இளகும் உளத்தின் இயல்பினைக் கண்டான்;
இசைத்தான்; இசையின் இடையே எழுந்த