பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எல்லைக்கு முன்பே முளைத்தான் தமிழனெனும்
சொல்லை மறுக்கத் துணியட்டும்! அன்னோர்கள்
தொல்காப் பியத்தைச் சுவைத்துப்பின் என்முன்னே
சொல்லாட வல்லாரோ, சோர்வடைவ தல்லாமல்?
“நாற்கடல் சூழ்ந்திடு நல்லுல கத்துளே
தோற்றங்கொள் மாந்தர் ஒருதாயின் தோன்றலே!”5
ஓதினர் இவ்வா றுலகினில் பின்னரே!
யாதும் நம் ஊரெனல் யாவருங் கேளெனல்
கோதில் தமிழன் பழம்பெருங் கொள்கையாம்!
ஆதித் தமிழன் அறிவின் முதிர்ச்சியே!
வெள்ளையன் கீழே அடிமை விலங்கேற்றுச்
சள்ளை யடைந்த தமிழினத்தைத் தன்னாட்சி
காக்க முனைந்துபின் கைவிட்ட காலத்தில்
காக்க முனைந்தோன் எவனாம்? கடலில்
எழுந்த இளம்பரிதி எம்மறிஞர் அண்ணா
பழந்தமிழர் கண்ட படைமறவன் ஆகானோ?
முன்னர் முளைத்தான் தமிழன்! அவன்வாயில்
முன்னர் முளைத்த ஒலியே தமிழாம்!
எனக்கூறி இங்கே இருக்கும் புலவர்
மணிக்கவிதை கேட்போம் மகிழ்ந்து!

முடிவுரை
(எண்சீர் விருத்தம்)


எவ்வுலகத் தமிழர்களும் இன்றிங் கிந்நாள்
      எதனாலே சூழ்ந்தார்கள்? தமிழின் மாட்சி!
செவ்வரங்கத் திருமாலும் கணிகண்ணன்வாய்ச்

      செந்தமிழுக் கடிமையெனும் செய்தி கேட்டோம்!