88
(நிலைமண்டில ஆசிரியப்பா)
பல்லோர் இருந்தனர் பார்த்தனம்! ஆயினும்
எல்லோரும் பாரதி தாசனா ராவரோ?
பாரதி தாசனார் பைந்தமிழ்ப் பாமன்னர்!
ஊரதில் இனிமேல் பிறப்பார் உண்டோ?
தலையினைத் தாழ்த்தாத் தமிழ்மகன்! தமிழின்
நிலையினை உயர்த்திய நெடியோன்! குறிஞ்சி
வேர்ப்பலா!! தமிழ்த்தும்பி! மெல்லிசை யாழாம்!
நேர்மை நெறியன்! நெடிய தோளன்!
துள்ளிக் குதித்துத் தொடுவான் எழுந்து
பள்ளி எழுச்சியைப் பாடிய விடிமீன்!
கண்ணை மலர்த்தும் கமழ்பூங் காற்று!
விண்ணை மலர்த்தும் விடியல்! தமிழால்
பண்ணை வழங்கும் படர்கிளைப் பூங்குயில்!
எண்ண இனிக்கும் சங்க இலக்கியம்!
இத்தனை சேர்ந்த எழிலார் திருவுரு
அத்தன் பார்தி தாசன் அமைவே!
இன்னுங் கேட்பீர் என்னரும் மக்காள்!
மன்னிய உலகின் மாத்தமிழ் வேந்தன்!
அகம்புறம் தந்த அழகுத் தமிழின்
புகுமுகம் காட்டிய புலவர் பெருமான்!
அகச்சுவை நகைச்சுவை அளித்த வள்ளல்!
பகைக்கெறி யீட்டி! பாவலர் ஏறு!
மலைகடல் காடு மறிகடல் வானில்
இலகிய அழகை உலகிற் கியம்பும்
அழகின் சிரிப்பு! பழகு செந்தமிழ்