உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

சீர்மிகு புதுவை மக்காள்!
      செந்தமிழ்ச் சிறுவ ரேறே!
கார்மிகு வானை மாற்றும்
      கலை நிறை தாய்க்கு லத்தீர்!
போர்மிகு போழ்தும் அஞ்சிப்
      புறமிடாப் புலிகாள்! வாழும்
ஊரறி வாணி தாசன்
      உமைமுதல் வணங்கி னேனே!

சுந்தரக் குமரச் செம்மல்3
      துறைதோறும் நுணுகி ஆய்ந்த
பைந்தமிழ்ச் செம்மல் கற்றோர்
      பழகுதற் கேற்ற செம்மல்!
இந்தநாள் ஈடே யில்லா
      இலக்கணச் செம்மல்! பாட
வந்துளோர் செம்மல் வாணி
      தாசன் நான் வணங்கி னேனே!

(கலிவெண்பா)


என்னில்லாள், பூவா எழில்முல்லைப் பல்லில்லாள்
முன்னர் எழுந்து முழுக்காடிப் பூச்சூடி

வந்தாள் எனையெழுப்ப! வந்ததுவே பூமணமும்!
‘எந்தநாள், எவ்வேளை என்ப தறியாமல்

தூங்குவது தானா தொழில்?’ என்றாள்! என்செய்வேன்?
மாங்குயில் இன்னிசையை வாரி வழங்கையிலே

தீங்கென்று யார் சொல்வார்? செய்வ தறியாது
‘மாங்கனியே!’ என்றேன் நான்; வாயிற்பல் இல்லையென்றாள்!

‘ஓங்க லிடைவந்த ஞாயிறே ஒள்வானம்

தாங்கும் இருளகற்றுந் தண்மதியே! என் போன்றோர்