பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வாழ வகையென்ன? என்ருள்! 'வளர்கலைகள் சூழும் உலகைச் சுவைத்துப்பார்!’ என்றேன்.நான்! அத்தான்! அதைத்தானே கேட்கின்றேன்! அவ்வுலகப் பித்தேறி ல்ைவாழாப் பேரிழப்பே வாழ்வினது சொத்தாகும்' என்றிங்கே சொல்கின்ருர் பெண்களெலாம்! புத்தம் புதிய கலையை விளக்(கு) என்ருள்! எேன்ன தருவாய் எனக்(கு)?’ என்றேன்! நாணிப்பின், முன்னர்க் கலையின் முடிச்சை அவிழ்த்துவிடும்’ என்ருள்; சிரிப்பொலியை எங்கும் நிறைத்தாளே! 'பொன்னே! புதுநிலவே! பூவே! புகலக்கேள்: பூவெல்லாம் உன்னிடத்தில் பூத்திருந்தும் பூத்தேடக் காவில் நுழைகின்ருய் கார்மயிலே! உன்றன் கலையாக் கலையை மணம் நாறும் தென்றல் குலைக்க அதன்மீது கோபமா கொள்கின்ருய்? துன்ப வுலகின் தொடர்பற்று நெஞ்சத்தில் இன்ப வுணர்வை எழுப்புவதே நற்கலையாம்! ஆசை மனையாட்டி! ஆன்ருேர் கலைகளெலாம் பேசும்நல் வாழ்வடையும் பேறு! (எண்சீர் விருத்தம்) சிலேபிறக்க வழிசெய்யும் கொல்லர் கூடம்; செய்தொழிலில் யாவருமே சிறப்பதில்லை! அலைபிறக்க வழிசெய்யும் காற்றே; ஆனல் அக்காற்றின் நலந்துய்ப்போர் சிலரே ஆவர்! கலைபிறக்க வழிசெய்யும் கருத்தும் கண்ணும்; காண்கின்ற கண்களெலாம் கலையுண் டாக்கா! தலைபிறக்க வழிசெய்யும் புதுமை ஆற்றல் தருமின்ப உணர்வெழுச்சி, கலையின் ஊற்றே!