95 மண்ணகத்தே வாழ்கின்ற மக்க ளெல்லாம் வாழ்நாளில் தமைச்சுற்றி வாழு கின்ற விண்ணகத்து முழுநிலவு, பொன்போற் பூத்த விரிவான உடுக்கூட்டம், இடுக்கிற் பாயும் பண்ணகத்தே கொண்டிருக்கும் ஒடை, செங்கண் பழங்கோதும் கருங்குயில்கள், செக்கர் வானம் கண்ணகத்தே நிலைநிறுத்தும் திறமை பெற்ருேர் நல்வாழ்வின் பயன் நல்கும் கலைஞர் ஆமே! கார்மோதும் மலைகுடைந்து, குடைவுக் குள்ளே கண்கண்ட எழுச்சிதரு பொருளை யெல்லாம் தார்மோதும் நீள்வாழை முதிராப் பிஞ்சாம் தச்சர்கை உளியெடுத்தே அழகுண் டாக்கி நீர்மோதும் கடல்மல்லேக் கரையோ ரத்தே நிலைநிறுத்தி வைத்தவர்யார்? சிற்பி யன்ருே1. சீர்மோதும் வாழ்விற்குப் பயனே நல்கும் செழுங்கலைஞர் இல்லையெனில் கைக்கும் வாழ்வே! எண்ணத்தைக் கவர்ந்திழுத்து நெஞ்சிற் குள்ளே இன்பவெறி ஊட்டுகின்ற உணர்வுண் டாக்க வண்ணத்தைக் குழைத்தெடுத்தே எண்ணெய் கூட்டி மறிகடலை, மலேமுகட்டை, மயிலாட் டத்தைக் கிண்ணத்தை எடுத்துப்பால் குழவிக் கூட்டும் கிழவியரும் சுவைப்பதற்கு மாடத் துள்ளே சுண்ணத்தைப் பூசிவைத்த சுவரில் தீட்டும் ஒவியர்கள் துணையின்றேல் துயர்முா ருதே! சிற்றுாரில் விழாவென்றர்: தெருக்கள் நான்கு சேருகின்ற இடத்தினிலே தெருக்கூத் தென்ருர்! முற்றத்தில் படுத்திருந்த நானும் சற்று விழித்தெழுந்து முன்போனேன்: திரைவிலக்கிப்
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/96
Appearance