பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே அண்ணன் பட்ட கடனைத் தீர்க்க வேண்டியே யோசித் தாரே சிறுவர் காந்தி அன்று முழுதுமே ! கடைசியாக அறைக்குள் மெல்லச் சென்றே அண்ணனின் கையில் அணியும் காப்பில் சிறிது வெட்டி எடுத்தனர். கடைக்குச் சென்றே அதனை விற்றுக் காசாய் மாற்றினர். காசைக் கொடுத்துக் கடனைத் தீர்த்தே வீடு திரும்பினர். காப்பை விற்றுக் கடனைத் தீர்த்தார் காந்தி என்பதை, கண்டு பிடிக்கவில்லை, வீட்டில் உள்ளோர் எவருமே. கேட்பாரில்லை. ஆயி னும்கம் காந்தி மனத்திலே, கேள்வி பலவும் எழுந்து எழுந்து வாட்ட லாயின. & 135-4