பக்கம்:பாட்டுத் திறன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 128 கருத்து, உணர்ச்சி,20 தொனி,2 உள்நோக்கம்2 என்று முறைப்படுத்தி ஒதுவர். கருத்து என்பது பேசுவோர் கூறுவது; அது பொது அனுபவத்தில் இருப்பதை அல்லது நிகழ்வதைக் குறிக்கும். அஃது அறிவுநிலையைச் சார்ந்திருக்குமே யன்றி உள்ளக்கிளர்ச்சிகளைச்சார்ந்திராது. அதை ஒருவித மனச்சுட்டு’ என்றுகூடக் கருதலாம். பேசுவோர் கையாளும் சொற்கள் அவர் எண்ணிக்கொண்டிருக்கும் கருத்தினையே கேட்போரையும் எண்ணுமாறு சுட்டுகின்றன. கேட்போர் புரிந்துகொண்டால், கருத்து கடத்தப்பெற்று விட்டதாகக் கருதலாம்; பேசுவோரும் தம் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டார் என்று கினைக் கலாம். இதைத்தான் நாம் மேலே சொல்லின் வெளிப்பொருள் அல்லது பொதுப்பொருள்" என்று குறிப்பிட்டோம். உணர்ச்சி என்பது அகவயமானது;24 உட்பகுதியைச் சார்ந்தது. அது கருத்தினைத் தழுவியிருப்பினும், அதனினின்று எளிதாகப் பிரித்தறியக்கூடியது. வண்ணப்படங்கள் அணி செய்யும் நூலொன்றினுக்கு மதிப்புரை எழுதுவோர், படங் களை நோக்க இந் நூலை எவரும் விரும்பி ஏற்பர்; நூற்பொருளை நோக்க எவரும் புறக்கணிக்கவே செய்வர்' என்று கூறினால், அவர் நூலாசிரியருக்குத் தன் கருத்தை வெளியிடுவதில் வெற்றி கொண்டார் என்று கொள்ளலாம்; ஆனால், அவர் தன் சொல் நயத்தின் களிப்பினை அவருக்கு உணர்த்தினரா என்பது ஐயத்திற்குரியது. கூறுவோர் கேட்போரிடையே கொண்டுள்ள மனப் பான்மையையே டாக்டர் ரிச்சர்ட்ஸ் தொனி எனக் குறிப் பிடுவர். பேசுவோர் கேட்போருக்கேற்பத் தன் பேச்சின் சொல் வளத்தை" மாற்றியமைத்துக் கொள்வதுடன், கேட்போரிடம் தான் கொண்டுள்ள மனப்பான்மைக்கேற்பவும் அதனை மாற்றி 19. #CŞāg-Sense. 20, a sor; 3.5-Feeling. 21. Ggif &sñ-Tone. 22. a sir G pri sto-Intention. 23. வெளிப்பொருள் அல்லது பொதுப்பொருள்.0ute or pubic meaning 24. -> s, ai uitnr fir-Subjective. 25. u srů ur sirsotn • Attitude. 26. சொல்வளம்: