பக்கம்:பாட்டுத் திறன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 36 பாட்டுத் திறன் பொதுமைப்படுத்துதல் பொதுவிதி காண்டல்?’ என்ற இரண்டு முக்கிய செயல்கள் நிகழ்கின்றன. முன்னது அவ்வகைப் பொருள் களிலுள்ள பொதுமைப் பண்புகளைப் பகுத்தறிந்து இனங் காண்பதோடன்றி, தேவைக்குப் பொருத்தமற்ற பண்புகளைப் புறக்கணித்தலையும் கொண்டது. பின்னது:பொதுமைப்படுத்திய கூறுகளையெல்லாம் அவ்வகைப் பொருள்களனைத்திற்கும் இருப்பதாகக் கொள்வது. நம்முடைய அநுபவத்தின் பரப்பிற் கேற்பப் பொதுமைக்கருத்தும் விரிந்துகொண்டே போகும். பொதுக்கருத்து சிக்தனைக்குப் பெருந்துணை செய்கின்றது. ஒரு குழுவினர் பணவீக்கத்தை"ப் பற்றிக் கலந்தாய்கின்றதாகக் கருதுவோம். ஒருவர், பொருள்களின் விலை ஏறிக் கொண்டே போனால் வேலையாட்களின் சம்பளமும் உயரவேண்டும்,' என் கின்றார். ஆனால் மற்றொருவர், சம்பளம் உயர்ந்து கொண்டே போனால், உற்பத்தியில் அதிகப்படியான உற்பத்திச் செலவைச் சரிக்கட்டுவதற்குப் பொருள் களின் விலை உயர்ந்தாக வேண்டும்' என்று மறுமாற்றம் தரு கின்றார். இன்னொருவர், அது சரிதான்; இந்தப் பொல்லாங் கான வட்டத்"திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, உற்பத்தியைப் பெருக்குவதுதான்' என்று கூறி உண்மை நிலையைக் காட்டு கின்றார். இங்கு நாம் கிளிப்பிள்ளை போல் பல சொற் களைப் பேசலாம்; அல்லது திட்டமான கருத்துகளைத் தெளி வாக உணர்த்தக்கூடிய சொற்களையும் பகரலாம். இவ்வாறு பொதுமைக்கருத்துகள் சிந்தனைக்குத்துணையாக அமைகின் மன. நம்முடைய கல்வியில் பெரும்பகுதி, குறிப்பாகப் பள்ளியில் பெறும் கல்விப்பகுதி, புதிய பொதுமைக் கருத்துகளைக் கற்றுக் கொள்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. தக்க யுக்தி முறைகளால் ஆசிரியர்கள் மாணாக்கர்களிடம் இக் கருத்துகள் வளரத் துணைசெய்தல் வேண்டும். நம்முடைய மொழி இக் குறியீடுகள் அடங்கிய ஒரு சாதனம். மொழிக்குறியீடுகளைக் கொண்டு நவீன சிந்தனை முழுதும் நடை பெறுகின்றது. இக் குறியீடுகள் பிறருக்கு எளிதில் கருத்து களைத் தெரிவிக்கத் துணைபுரிகின்றன. பெரும்பாலும் 34. பொதுமைப்படுத்துதல் Abstraction, 35, Gurgisfift & ori-á, - Generalization. 36. ussursst å sin - Inflation. ஆ7. பொல்லாங்கான வட்டம் Wicious Circle