பக்கம்:பாட்டுத் திறன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠 பாட்டுத் திறன் உண்டு நுகர வேண்டிய பொருள்; அங்ங்ணமே பாட்டும் படித்து நுகர வேண்டியதொன்று. பாட்டதுபவத்தைச் சொற்களால் வரையறைப்படுத்தி அளந்து காட்ட இயலாது. பாவின் தயமெல்லாம்-யானும் பகர வல்லேனோ? ஆவின் பாற்சுவையை-காழி அளந்து காட்டிடுமோ?? என்னும் கவிமணியின் வாக்கு இவ்விடத்தில் சிந்தித்தற்குரியது. பாட்ட நுபவத்தில் திளைத்த ஒருசிலர் தம் அதுபவத்தைச் சொற்களால் கூறியுள்ளனர்; இவ்வுலகில் மிக்க சுவையான பொருளையுண்ட ஒருவர், வானமிழ்தம்போல் இனித்தது' என்று கூறுகின்றார். அவர் பார்க்காத-உண்டு அறியாதஒன்றினைக்கொண்டு உண்ட பொருளொன்றினை விளக்கு கின்றார். ஆனால், அதனைக் கேட்போர் அவர் உண்ட பொருளை நன்கு அறிந்தவர்கள்போல் தலையை அசைக் கின்றனர். இது வீண் அசைப்பு அன்று; கூறுவோர் சொல் வதை நன்கு உணர்ந்தே அவர்கள் அங்ங்னம் அசைக்கின்றனர். பல பொருள்களையுண்டு பல சுவைகளைக் கண்ட அதுபவத் தின் விளைவாக இவர்கள் மனம் இனிமைக்கு ஒர் அளவுகோலை வகுத்துக் கொண்டுள்ளது; அந்த அளவுகோலின் மேல் எல்லைக்கு வரையறையில்லை. அந்த மேல் எல்லைதான் வானமிழ்தத்தின் இனிமையைக் காட்டுவது. இந்த அளவு கோலைக் கொண்டே சொல்லுவோரின் குறிப்பைக் கேட்போர் அறிகின்றனர். இத்தகையதொரு அளவுகோல் போன்ற தொன்றைக் கொண்டே கவிதைகளை அநுபவித்தவர்களும் சொற்களால் விளக்கியுள்ளனர். திருவாசகத் தேனில் ஊறிய @Ji-39ss'ssssss வான்கலந்த மாணிக்க வாசக! கின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து கெழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே ே என்று அதன் சுவையை எடுத்துக்காட்ட முயலுகின்றார். கம்பன் காவியத்தை அநுபவித்த மற்றொருவர், 5. கவி மணி : பாசதியும் பட்டிககாட்ட அம்.28 8. ஆளுடைய அடிகள் அருள்மாலை 7,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/16&oldid=812364" இலிருந்து மீள்விக்கப்பட்டது