பக்கம்:பாட்டுத் திறன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பாட்டுத் திறன் இல்லை; காட்சியிலும் யாதொரு மாற்றமும் இல்லை என்பதை உணர்க, இயைபுக் கற்பனை : பறவைகள் குஞ்சு பொாரிப்பது நாம் காள்தோறும் காணும் காட்சி. மக்கள் நாள்தோறும் கூற்றின் வாய்ப்படுவதையும் நாம் காணாமல் இல்லை. இந்த இரண்டு காட்சிகளையும் அடிக்கடி கண்ணுறும் நம் உள்ளத்தில் எந்த விதமான புதிய கருத்தும் எழுந்ததில்லை; எழுவதுமில்லை. வளளுவப் பெருமானின் கருத்தில் அக்காட்சி என்ன கருத்தினை எழுப்பியுள்ளது பாருங்கள். குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடு உயிரிடை கட்பு.' பறவைகள் குஞ்சுபொரிப்பதும் மக்கள் இறந்துபடும் நிகழ்ச்சியும் ஒன்றுசேர்ந்து - இணைந்து - உயர்ந்ததோர் உண்மையையல்லவா விளக்கிகிற்கின்றன? இதில் பறவை குஞ்சு பொரிக்கும் காட்சி கவிஞனது உணர்ச்சியைத் துண்டவில்லை. ஆனால், அவன் உள்ளத்தில் படிந்துகிடந்த சிலையாமை' என்ற உணர்ச்சியே பறவை குஞ்சுபொரிக்கும் காட்சியை நினைப் பூட்டியது. அவ்வுணர்ச்சிதான் தனக்குப் பொருத்தமான பிறி தொரு காட்சியை நினைவுக்குக் கொணர்ந்து முன்னரே படிக் திருந்த உணர்ச்சியைக் கலையாக மலரச் செய்தது. புற உலகில் காணும் நிகழ்ச்சி அகத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியைத் து.ாண்டுகின்றது என்றாலும், பெரும்பாலும் உள்ளதுபவமே (inner experience) அத்தகைய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்கின்றது என்று சொல்லலாம். எனவே, கற்பனை யாற்றலைத் தூண்டுவதற்கு உள்ளத்தில் அடங்கியிருக்கும் உள்ளதுபவமே து.ாண்டுகோலாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது. இத்தகைய கற்பனையைத்தான் இயைபுக் கற்பனை என்று வழங்குவர் வின்செஸ்டர். ஒரு பொருள், கருத்து, அல்லது உணர்ச்சி ஆகியவை சம்பந்தப்பட்ட உணர் வால் ஒற்றுமையுள்ள காட்சிகளை இணைத்து நிற்பது இயைபுக் கற்பனையாகும்.' 11. குறள்-388, 12. The associative imagination associates with an object, idea or emotion imges emotionally akin. If such association be not based on emotional kinship, the process must be called Fancy— C. T. Winchester.