பக்கம்:பாட்டுத் திறன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 露?g துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண் டற்று' எனற வள்ளுவத்தில் அடங்கியுள்ள கற்பனையும் இயைபுக் கற்பனையே. துறந்தார் பெருமையை எண்ணிப்பார்த்த கவிஞ. னுக்கு இறந்தாரை எண்ணிப் பார்க்கும் செயல் கினைவுக்கு வருகின்றது. அது மிக அழுத்தமாகத் துறந்தார் பெருமையைச் சிறப்பித்தும் கிற்கின்றது. சிலமும், கடலும், வானும், மற்றும் இவ்வையகத்திலுள்ள பொருள்களனைத்தும் எல்லையுடையன. ஆகவே, அவற்றினை ஆசிரியர் குறிப்பிடவில்லை. கடல்மணல், வான உடுக்கள் முதலியவற்றைக்கொண்டு துறந்தார் பெருமை யின் சிறப்பினை அளவிட்டுக் கூறியிருந்திருக்கலாம்; எனினும், வள்ளுவன் அவற்றைக் குறிப்பிட்டிலன். இவ்வையத்தில் அரசினர் பிறப்பு-இறப்புக் கணக்கு எடுக்கின்றனர். இக்கணக்குப் படி பிறப்பு இறப்புத் தொகை அளவுபட்டுக் கிடக்கும். உலகம் தோன்றின நாள்தொட்டு இன்றுவரை இறந்தார் தொகை இவ்வளவுதான் என்று கூறவியலாது. தவிர, உயர்தினையாகிய மக்கள் உலகத்தில்தான் இக் கணக்கும் எடுக்கப்பெறுகின்றது. ஆனால், ஆசிரியர் உயர்தினை உலகையும் அஃறிணை உலகை யும் உளங்கொண்டு இறந்தாரை' என்று உயர்திணை வாய்பாட் டால் அருளியுள்ளார். இதை எண்ணுந்தோறும் துறந்தார் பெருமை அளவின்றி வளர்ந்து கிற்கின்றது. என்னே இக்கற்பனையின் சிறப்பு! கலிங்கத்துப் பரணியில் ஒரு காட்சியினை மட்டிலும் கண்டு மேலே செல்லுவோம். கலவிப் போரில் ஒருத்தியின்கொங்கையில் எப்படியோ கைக்குறி ஏற்பட்டு விடுகின்றது. அந்தக் குறியை அடிக்கடி பாாக்கும்பொழுதெல்லாம். அவள் கலவியில் தான் பெற்ற இன்பத்தை ஆடைகின்றர்ள், சித்திய தரித்திரன் ஒருவ்னுக்கு எதிர்ப்ார்த்வ்ண்ண்ம் நிறைந்து பொருட்குவியல கிடைத்தால் அவன் அச்சத்தின் மிகுதியால் அப்பொருட் குவியலைப் பிறர் அறியா வண்ணம் பார்த்துப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி யுறுதல் போல, அவளும் தன் கொங்கையில் புதியதாகத் தோன்றியுள்ள தம் கொழுநனின் ககக் குறியை நாணம் மிகுதி யால் தனியிடத்திற்குச் சென்று அங்குப் பார்த்துப் பார்த்து மகிழ் 18. குறள்-23.