பக்கம்:பாட்டுத் திறன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 189 டிெ-66), கைவழி நயனம் செல்லக் கண் வழி மனமுஞ் செல்ல' (மிதிலைக்-8), கொல்லாழி நீத்தங்கோர் குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல் (டிெ-154), மாகமடங்கலும் மால்விடையும் கொண்ட கொண்டல்' (டிெ-154), மாகமடங்க லும் மால்விடையும் பொன், நாகமும் நாகமும் காண கடந்தான்' (கார்முகப் 83), குழலும் வீணையும் யாழும்என் றினையன குழையும், மாலை மென்மொழி கிளிக்கிருந் தளிக்கின்ற மகளிர் (ஊர்தேடு.6), செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும், கவிக்கு நாயகன் (டிெ-183), கரும்பை யும் சுவை கைப்பித்த சொல்லியர்' (டிெ-197), நூற் பெருங் கடல் நுணங்கிய கேள்வியன் (டிெ-306), சாந்தளாவிய கலவை மேற் றவழ்வுறு தண்டமிழ்ப் பசுக்தென்றல் (டிெ-210), 'கற்றைப்பூங் குழலாளைச் சிறைவைத்த கண்டகன் (டிெ-333) 'ஊழியான் பெருங்தேவி (ைெடி-339, மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்’ (காட்சிப் - 3), தேவு தெண் கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த, ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற உருவாள்' (டிெ-11), ஆடல் நோக்குறின் அருந்தவ முனிவர்க்கும் அமைந்த வீடு மீட்குறும் மேனகை (பிணிவீட்டுப் - 48), கடையிலா மறையின் கண்ணும், ஆரணங்காட்டமாட்டா அறிவினுக்கறிவு மன்னோன்' (டிெ-79), மூலமும் நடுவும் சறும் இல்லதோர் மும்மைத்தாய, காலமும் கணக்கும் த்ேத காரணன் ஓவியர்க் கெழுத வொண்ணா உருவத்தன்' (டிெ-86), விரிந்தபோர் அரக்கரென் னும், கான்சுட முளைத்த கற்பின் கனலி (சூர்ப்பணகைப்ப58), வல்திண்கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை (டிெ. 114), சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியான், (வீடணன் அடைக் - 136) என்பனபோன்ற எத்தனையோ அரிய இனிய செஞ்சொற்றொடர்களைக் கம்பன் தனது இதய மாகிய நாணயசாலையினின்று ஆக்கித் தந்துள்ளான். இச் செஞ்சொல் இன்பம் அடிகள் தோறும் தொடர்ந்து சென்று தெவிட்டாத தீங்கவியாய் நம்மை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தும் இடங்களும் மிகமிகப் பலவாயுள்ளன. ". . . கண்டனன் என்ப மன்னோ கதிரவன் சிறுவன் காமர் குண்டலங் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும்