பக்கம்:பாட்டுத் திறன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 191 இன்றிய6. வை என்பது எளிதில் பெறப்படும் . பாரதியின் 'கண்ணன் பாட்டில்’ 'கண்ணம்மா என் காதலி' 'கண்ணம்மா-என் குழந்தை' என்ற பகுதிகளைப் படித்தால் இவ்வுணர்ச்சி வேற்றுமைகளை நன்கு உணரலாம். ஒரு சிலவற்றை ஈண்டுக் காட்டுவோம். காதலனைக் காதலி பின்னே வந்து சின்று கண் மறைக் கின்றாள். சிரித்த ஒலியி லவள் கைவிலக்கியே திருமித் தழுவி" என்ன செய்திசொல் லென்றேன்; கெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்ட்ாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துகித மேக மளங்தே, பெற்ற கலங்க ளென்ன? பேசுதி' என்றாள். 'நெரித்த திரைக்கடலில் கின்முகம் கண்டேன்; நீல விசும்பினிடை கின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் கின்முகங் கண்டேன் பிரித்துப் பிரித்துகித மேக மளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த ஒலியினிலும் கைவி லக்கியே திருமித் தழுவியதில் கின்முக கண்டேன்."11 என்ற பாடல்களில் அன்புணர்ச்சி கலந்த காதலன்-காதலிப் பேச்சினைக் காணலாம். மேலும், பிள்ளைக் கணியமுதே-கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே-என்முன்னே ஆடிவருக்தேனே. கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி: உன்னைத் தழுவிடிலோ-கண்ணம்மா உன்மத்த மாகுதடி! 11. கண்ணம்மா-என் காதலி.