பக்கம்:பாட்டுத் திறன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£G4 பாட்டுத் திறன் வனைச் சுற்றி ஏனைய கோள்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட முறையில் வெவ்வேறு வேகத்தில் இயங்குவதைப் போலவே, அணுக்களிலும் உட்கரு வினைச் சுற்றி எதிர்மின்னிகள்' பல் வேறு அயனப் பாதைகளில் இயங்குகின்றன. ஐம்பெரும் பூதங்கள் கம்மால் அறிய முடியாத ஒருவகை ஒழுங்கில்வண்ணத்தில்-இயங்குவதனால்தான் பலவகையான பொருள் களும் உயிரினங்களும் தோன்றுகின்றன. இதைத்தான் கம்ப நாடன், அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்" என்று கூறுகின்றான். இந்த அகிலத்திலுள்ள எல்லா அண்டங் களையும் ஏதோ ஒர் ஒழுங்கில் அமைத்தே இயங்கும்படி செய் கின்றான் ஆண்டவன், சாட்டையிலாப் பம்பரங்கள்போல் சுழல வும் செய்கின்றான். இதை, சாட்டிகிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கும் குற்றாலத்து அண்ணலார்." என்று கவிஞனொருவன் கற்பனையில் அமைத்துக் காட்டு கின்றான். ஆட்டம்பெறும் பொருள்கள் இயங்கும்பொழுது ஆட்டும் பொருளும் இயங்க வேண்டியதன்றோ முறை ஆகவே, ஆட்டுவிக்கும் ஆண்டவனும் இயங்குகின்றான். அதுதான் தமிழர்கள் கண்ட நடராச தத்துவம்; தில்லையில் திருநடனம் புரிந்துகொண்டிருக்கும் அம்பலத்தானின் ஆனந்தக்கூத்து. உணர்ச்சியும் ஒலிநயமும்: உணர்ச்சி மிகுந்த கிலையில் நம் முடைய மனத்தில் அசைவு ஏற்படுகின்றது. அங்கிலையில் உட லிலும் அவ்வசைவு பிரதிபலிக்கின்றது. உடலில் எப்படியா கிலும் அவ்வசைவு புலப்பட்டே திரும். சிறுவர்களிடத்தில் 12- Gars - planet. 18. *-*.*Gs • Nucleus. 14. எதிர்மின்னி - Electron. 15. அயனப்பாதை . ஆ. 18. சுந்தரகாண் காப்புச் செய்யுள், 17. குற்றாலக் குறவஞ்சி.செய், 101.