பக்கம்:பாட்டுத் திறன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் - 205 அதைத் தெளிவாகக் காணலாம். இரண்டாண்டுகட்கு முன்னர்ச் சிங்கப்பூருக்குச் சென்ற தந்தை பல விளையாட்டுப் பொருள் களுடனும் பல்வேறு தின்பண்டங்களுடனும் வந்திருக்கின்ற செய்தியைத் தொடக்ககிலைப் பள்ளிக்குச் சென்று திரும்பி வந்த சிறுவர்களுக்கு அன்னை அறிவிக்கின்றாள். சிறுவர்கள் அடையும் மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் துள்ளுவர்; ஒடுவர்; ஆடுவர்; பாடுவர், மனத்தின் அசைவு அவ்வாறு உடல்மூலம் வெளிப்படுகின்றது. அங்கனமே, பண்டைக் காலத்தில் ஒரு வெற்றிக்குரிய நிகழ்ச்சியைக் கொண் டாடுங்கால், ஆடியும் பாடியும் மகிழ்ந்தனர். ஆனால், இன்று நாகரிகத்தில் வளர்ந்த நம்மிடம் அவ்வுணர்ச்சி குறிப்பாகப் புலப் படுகின்றது. நம்முடைய உடல் முழுவதும் ஆடாவிடினும் கம் முடைய வாயில் பிறக்கும் ஒலிகளில்,-சொற்களில்-அந்த ஆடலும் பாடலும் புலப்படும். நாம் எதையாவது ஒலிப்போம்; அதில் பொருளும் இருக்கும்; இல்லாமலும் போகும். அதில் ஒலிநயம் இருக்கும்; தன்னன தன்னனனா என்றாவது பொரு ளின்றி ஒலிப்போம். பொருளுடன் பேசினாலும் அந்தப் பேச்சில் அமையும் சொற்களில் ஒருவகை ஒழுங்குமுறை அமையும்; ஒலி கயம் புலனாகும். இத்தகைய ஒரு நிகழ்ச்சியைக் கம்பகாடன் காட்டுவான். சிவதனுசை இராமன் ஒடித்த செய்தியை நீலமாலை என்ற தோழி சீதையிடம் கூற வருகின்றாள். நீண்ட நாட்களாக நடைபெறாது கிடக்கும் சீதையின் திருமணம் கடக்கப் போவதை அறிந்த அவளுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடு கின்றது. சீதையிடம் வந்தவள், - வந்தடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் அந்தமில் உவகையள்; ஆடிப் பாடினள்' என்று கம்பன் காட்டுவான். ஒலி கயத்திற்குப் புலன்களை உள்முகமாகத் திருப்பிவிடும் ஆற்றல் உண்டு. சிறந்ததோர் இன்னிசைக் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது நம்முடைய கண், காது முத லான புலன்கள் வெளியுலகப் பொருள்களில் ஈடுபடாமல் அமைதி பெறுகின்றன; உணர்ச்சிகளும் உடம்பின் அளவில் 18. கார் முகம் செய் க்ரீ.