பக்கம்:பாட்டுத் திறன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 21? நேரசையாயிற்று. வேங் - என நெட்டெழுத்து ஒற்றடுத்து நேரசையாயிற்று. தன் - குற்றெழுத்து ஒற்றடுத்து கோசையா யிற்று. எ - டு: வெறி . சுறா - iறம் . குரால் (கிரை யசைகள்). இதில் வெறி - எனக் குறிலிணைந்து நிரையசையாயிற்று. சுறா. எனக் குறில் கெடில் இணைந்து கிரையசையாயிற்று. நிறம் - எனக் குறில் இணைந்து ஒற்றடுத்து கிரையசையாயிற்று. குரால்- குறில்நெடில் இணைந்து ஒற்றடுத்து கிரையசை யாயிற்று. சீர் : அசைகள் சிறுபான்மை தனித்தும். பெரும்பான்மை இரண்டுமுதல் நான்கு வரையில் தொடர்ந்தும் வருவது சீர் என வழங்கப்பெறும். அது - ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகைப்படும். இவற்றின் வாய்பாடுகள் வருமாறு: ஓரசைச்சீர் நேர் - நாள் ; கிரை - மலர். இவை பெரும்பாலும் வெண்பாவின் ஈற்றில் வரும். இவற்றை அசைச்சீர்' என்றும் வழங்குவர். காசு', 'பிறப்பு என்ற சீர்களைக் கொண்டு வெண்பாக்கள் இறுவதும் உண்டு. 'மங்கலமென்ப' (குறள் - 0ே), அகரமுதல' (குறள்-1) என்ற குறள் வெண்பாக்கள் முறையே இவ்வாறு இறுவதைக் காண்க. ஈரசைச்சர் நேர்நேர் தேமா கிரைநேர் புளிமா இவை மாச்சீர் எனப்பெறும். கிரைகிரை கருவிளம் நேர் கிரை கூவிளம் இவை விளச்சீர் எனப்பெறும். இவை இயற்சீர் எனவும், அகவற்சீர் எனவும், ஆசிரியவுரிச் சீர் எனவும் வழங்கப்பெறும்,