பக்கம்:பாட்டுத் திறன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 339 கம்பகாடன் நான்கு சீர்களாலமைந்த இக்கலிவிருத்தத்தில் ஏறக் குறைய அறுபதுவகை ஓசைநயமுள்ள கவிதைகளை யாத்துள் ளான். அசை, சீர்கள் அளவில் இவையாவும் கலிவிருத்தம் என்றே வழங்கப்பெறினும், ஒசையால் வேறுபடுபவை. இங்ங்னமே கலித்துறை, அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் முதலியவற்றிலும் சீர்களைப் பலவாறு வேறுபடுத்திஅமைத்தும் பல்வேறு ஓசை வேறுபாடுள்ள பாடல்களை ஆக்கமுடிந்தது. ஒருவர் கம்பராமாயணத்திலுள்ள செய்யுள் விகற்பங்களைக் கணக்கிட்டு, - வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற் றாறே? என்று அறுதியிட்டுள்ளார். இங்ங்ணம் கணக்கிடுதல் எளிதன்று. பாவகைகள் எத்தனை யுளவாயிருப்பினும் அத்தனை வகைகளின் மர்மங்களையும் இதயத்துடிப்புக்களையும் நன்றாக இனிது உணர்ந்து அவற்றையடக்கியாண்டுள்ளான் கம்பகாடன். அறுசீர் விருத்தத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டால் எத்தனையோ வகைகளைக் காணலாம். - பொன்னையேர் சடையான் கூறக் - கேட்டலும் பூவின் கேள்வன்!22 இஃது ஒருவகை. கடலோ மழையோ முழுநீலக் . கல்லோ காயா கறும்போதோ.’ இது பிறிதொரு வகை. குழைக்கின்ற கவரி வின்றிக் கொற்றவெண் குடைய மின்றி.* என்பது மற்றொருவகை. சீதப் பணிநீ ரளவித் திண்கா லுதவுங் தண்கால்." என்பது நான்காவது வகை. - ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்திர் என்றாள்' என்பது ஐந்தாவதுவகை. இங்ங்னம் பல. 21. கம் பராமாயணத் தனியன். 22. அகலிகை-73 23. பால மிதிலை .65. 24. அயோ நகர் தீங்கு:2. 25. ഒു.-39. 26. அயோ குகப்-87,