பக்கம்:பாட்டுத் திறன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாட்டுத் திறன் தல்லது தானாகக் கூறுபடாமையின் காளென ஒன்றுபோல்' என்றும், அது தன்னை வாளென்று உணரமாட்டாதார் நமக்குப் பொழுது போகா கின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்க லின் காட்டி என்றும், இடைவிடாது ஈர்தலான் வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரிய ரா.கலின் :உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார்' என்ற உரைப் பகுதி மேற்கூறிய உண்மையினைக் காட்டுகின்றது. வாழ்க்கையைக் காட்டும் காவியப் பகுதிகளிலும், அகத்துறை களமைந்த சங்கப் பாடல்களிலும் இத்தகைய உண்மைகளைப் பரக்கக் காணலாம். ஒலிநயமும் யாப்பும். இவை இரண்டும் பாட்டதுபவத்திற்கு இன்றியமையாத கூறுகளாகும். ஒலிநயம் கேட்பவரின் செவி வாயிலாக அவருடைய உடல் நரம்புகளை இயக்கிவிடும். எங்கோ பாடப்பெறும் தேவார இசையைக் கேட்டு நாம் அதில் மெய்ம்மறந்து ஈடுபடுகின்றோம். அங்ங்னமே ஒரு கவிதையை வாய்விட்டு அதற்குரிய ஓசையுடன் படிக்கும்பொழுது அதன் ஒலி கயத்தில் ஈடுபடுகின்றோம்; நம்முடைய உடலும் அதன் வயப் பட்டு நரம்புகளும் தசை நார்களும் அதற்கேற்ப மெல்ல அசையத் தொடங்கும். ஏட்டிலுள்ள சொற்கள் கருத்துகளை மட்டிலும்தான் உணர்த்தும், அங்ங்னமே ஏட்டிலுள்ள கவிதை யும் உணர்ச்சியின்றிப் படித்தால் கருத்தினை மட்டிலுமே உணர்த்தும். ஒருவர் பேசும்பொழுது மேற்கொள்ளும் முகக் குறிப்புகள், கையசைவுகள், ஒலிப்புகளின் அழுத்தங்கள் முதலி யவை சேர்ந்தால்தான் உணர்ச்சி நன்கு புலப்படும். கவிதை யைப் பாடியவர் இத்தகைய குறிப்புகளைப் பாடலில் விட்டுச் செல்லவில்லை; விட்டுச் செல்லவும் முடியாது. கவிதையின் ஒலிநயத்தைத் துணைக்கொண்டால் கவிஞனின் உணர்ச்சியைப் பெற்றுவிடலாம். உணர்ச்சியின்றி ஒரு பாடலை அநுபவிக்க வேண்டும் என்று முயல்வது உப்போ, சருக்கரையோயின்றி ஒரு பொருளைச் சுவைப்பது போன்றதாகும். காதல உணர்ச்சி மிக துண்ணியது. தலைவன் தான் லைவியை விட்டுப் பிரிக்க ே (} గా 1 : يبين عام مر بهم தி விட்டு ரிந்து போவதைத் தோழிக் குணர்த்து கின்றான். தோழி அங்ங்ணம் பிரியின் அவன் செயலைப் பீடிலார் 17. gså guih. Rhythm

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/26&oldid=812586" இலிருந்து மீள்விக்கப்பட்டது