பக்கம்:பாட்டுத் திறன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 52 பாட்டுத் திறன் தொண்டைவாய் அரக்கி மார்கள் சூல்வயி(று) உடைந்து சோர அண்டமும் பிளந்து விண்ட தாம்என அனுமன் ஆர்த்தான்." இஃது அனுமன் அசோகவனத்தை அழித்து ஆரவாரம் செய்ததைக் கூறியது. அனுமனது பேராரவாரத்தால் பூமி கிழிந்து அவ்வாய் வழியாகக் கடல் நீர் மோழையாகப் பாய்ந்தன என்றும், திக்குயானைகளும் தேவர்களும் கலங்கி நிலைகலங்கினர் என்றும், கருவுற்ற அரக்கிமார்கள் கருச்சிதையப் பெற்றனர் என்றும் அவ்வாரவாரத்தை அதன் தன்மையினும் மிகுத்துக் கூறியவாறு. வேற்றுப்பொருள் வைப்பு : சேது.கட்டுவதற்குக் குரங்குகள் மலைகளை வேருடன் பறித்துக்கொண்டு வருகின்றன. நளன் என்ற வானரத்தச்சன் மலைகளை வாங்கி வரிசைப்பட அம்ைக் கின்றான். அங்ங்னம் அமைக்கும்போது பல கிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.மரங்களோடு பொருந்திய வானுற வோங்கிய மலைகள் தாம் கடலில் வீழ்ந்தொழிந்தாலும், தம்மிடத்தேயுள்ள கறுங்கனிகள், காய்கள், தேன், ஊன், பூக்கள் முதலியவற்றை மீன்கள் உண்ணும்படி பொலியச் செய்தன என்ற ஒரு கிகழ்ச்சியைக் கூறவந்த கவிஞர், பெரியோர்கள் அடியோடு அழிக் தாலும் தம்முடைய வண்மைக் குணத்தை யொழிவார்களோ? என்று முடித்துக் காட்டுவர். தேமுதற் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வப் பூமுத லாய எல்லாம் மீன்கொளப் பொலிந்த அன்றே மாமுதல் தருவோடு ஒக்கும் வானுயர் மானக் குன்றம் தாமுத லோடுங் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர்??? என்பது மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் குறிப்பிடும் கவிதை, ஒரு பொருளின் திறந்தொடங்கிப் பின்னர் அது முடிதற்கு வலியுடைய பிறிதொரு பொருளை உலகறி பெற்றியான் வைத்து மொழிவதை வேற்றுப்பொருள் வைப்பணி என்று குறிப்பர் 22. சுத்தா பொழிலிறுத்த-60, 28. யுத்த சேதுபத்தன-18,