பக்கம்:பாட்டுத் திறன்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3?? களைப் போற்றி வளக்ர்கும் போக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. அத்தகைய போக்கினை அக்காலத்து அறிஞர்களும் ஏற்கவில்லை; அக்காலத்திற்குப் பின்னர்த் தோன்றிய அறிஞர்களும் அதனைக் கடிக்தே வந்தனர். பரிதிமாற்கலைஞரின் கடிந்துரை ஈண்டுத் தரப் பெறுகின்றது: - 'அணிகளுட் சொல்லணிகள் விசேடமாய் நல்லிசைப் புலவர் களான் மதிக்கப்படுவன அல்ல. முற்காலத்தில் சங்கச் செய்யுட் களிலெல்லாம் சொல்லணிகள் காண்டலரிது. இச்சொல்லணி களிலும் சித்திர கவிகள் மிகவும் ஒதுக்கப்படுவனவாயின. "காஞ்சிப் புராண மாதிய சில நூல்களே யிவற்றுட் சில கொண் டியங்குகின்றன. மடக்குகளெல்லாம் விசேடமாய் நூல்களிற் பயின்று வராமல் அவற்றுள் ஆங்காங்கு வரும். இடைக் காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் காடுபவராய்ச் சொல் லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள் யமகம், திரிபு முதலிய செய்யுட்கள் பலவியற்றினர். பின்னர்த் திரிபந்தாதி களும் யமகவந்தாதிகளும் சிலேடை வெண்பாக்களும் அளவிறக் தன வெழும்பின. இவை யனைத்தும் பெரும்பாலும் பொருட் செறிவிலவாய் வீண் சப்த ஜாலங்களாய் மட்டில் முடிந்தன. இக்காலத்திலும் தென்னாட்டிற் புலவர் பலர் யமகந்திரிபு பாடுதலையே பெரிதாகவெண்ணி வாணாளை வீணாளாகக் கழிப்பர். - சொன்னலத்தினும் பொருணலமே சிறந்ததெனப் பேரறி வாளர் யாவரும் கூறுவர். யமகந்திரிபுள்ள பாடல்களை உயி நில்லாப் பாட்டுக்கள்' என்றும், கருத்து நலம் வாய்ந்த கற்பனை யுள்ள பாடல்களை'உயிருள்ள பாட்டுக்கள்’ என்றும் அறிவுடை யோர் பலர் கூறக் கேட்டிருக்கின்றனம். இஃதுண்மையே என்பது திண்ணம். இவ்வாறவர்கள் கூறுதற்குற்ற காரணங்கள் யாவை யென்று ஆராய்வோம். முதலாவது: மிறைக் கவிகள் பாடு மிடத்து மிக்க காலஞ்செல்லும்; அப்படிக்காலஞ்சென்றும் சிற்சில வேளை களில் அவைகள் பாடுவோரிட்டப்படி யமையாமற் போவது முண்டு. இவ்வாறு முற்கி மோதி முனைந்தடித்து மிறைக் கவி களைச் சொல்லளவால் ஒருவாறமைத்து முடித்த பின்னரும் அவை சிறந்திருப்பதில்லை. ஏனென்றால், அவற்றின்கட் பொரு ணலமில்லை. இரண்டாவது: கவிகளியற்றுவது யாவர்க்கும் பயன் படல் வேண்டுமென்பது கருதி. அக்கவிகளினும் சில, திரி