பக்கம்:பாட்டுத் திறன்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a22 பாட்டுத் திறன் சொற்களாலமைந்து விட்டாற் படிப்பவருட் பலர் திகைப்பர். இவ்வாறிருக்கச் செய்யப்படும் கவிகளோ மிறைக் கவிகள்; அம் மிறைத் தன்மையோடு இலக்கணச் சக்திகளுஞ் செறிந்தன. எதிர் பாராதபடி சொற்கள் பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக் கிடந்தன. இப்படியென்றால் இம்மிறைக்கவிகள் யாருக்குபயோ கம் மிறைக்கவிஞன் தானே மகிழ்ந்து கொள்ளுவதற்கு அவை ஒரு வேளை பயன்படலாம். வகையுளி என்பதற்கு வேண்டிய உதாரணங்கள் இம்மிறைக் கவிதைகளிற் காணலாம். மூன்றா வது: இத்தகைய மிறைக் கவிகள் படிப்போனது காலத்தையும் வீணாக்கிப் பலவிடங்களிலும் அவனை மயங்க வைக்கின்றன. ஏன்? சிற்சில சமயங்களில் பாடினானையுமே மயங்க வைக்கின் றன. இத்தன்மையான இடர்ப்பாடுகள் கிரம்பிய மிறைக்கவிகள் கந்தமிழ்ப்புலவர்கள் மனங்களைக் கவரா தொழிவனவாக.' இந்த நூற்றாண்டில் கவிதை நிலை: மேலே கண்ட நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலை இந்நூற்றாண்டில் நிலவுகின்றது. இன்று கற்பனையும் உணர்ச்சியும் சிறந்த இடம்பெற்று உள்ளன: யாப்பும் ஒலிநயமும் கவனம் பெறாதநிலை ஏற்பட் டுள்ளது. இந்நூற்றாண்டில் உரைநடைப்பாட்டு (வசன கவிதை) என்ற ஒருவகைப்பாட்டுத் தோன்றியுள்ளது. இதில் ஒலி நயமும் இல்லை. யாப்பும் இல்லை. உணர்ச்சியும் கற்பனை யும் சிறந்திருத்தல்காரணமாகச் சிலர் இயற்றும் இப்புதுவகை உரைநடைப்பாட்டுக்கள் பெரிதும் போற்றப்பெறுகின்றன. பாரதியாரின் வசனகவிதைகள் இவ்வகைக் கவிதைகட்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். இவற்றுள் சில, சிறு நாடகங் களின் உருவமும் பெற்றுத் திகழ்கின்றன. - 41. தமிழ்மொழி வரலாறு-ஐவகையிலக்கணம்: uá-54.55,