பக்கம்:பாட்டுத் திறன்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பாட்டுத் திறன் ஒருவரும் குறிப்புப் பொருளை விரித்துக்கூறித் தனி இலக்கணம் வகுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.ஆசிரியர் தொல்காப்பியனார் பிறிதொரு பொருள் தோன்ற நிற்குமாறு உள்ளுறையாகக் கூறு வதை உடனுறை, உவமம், சுட்டு, கை, சிறப்பு என ஐந்து வகையாகக் கூறியுள்ளார். உடனுறை உவமம் சுட்டுங்கை சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே." என்பது அவர் கூறும் நூற்பா. உடனுறை என்பது இறைச்சிப் பொருள் (suggestion); உவமம் என்பது உள்ளுறை உவமம் (allegory). இந்த இரண்டுவகைதான் பயின்று வருவன; வழக் கிலும் உள்ளன. சுட்டு, ககை, சிறப்பு என்ற ஏனைய மூன்றும் அதிகம் பயின்றுவரவில்லை; வழக்கிலும் இல்லை. எனவே, தொல்காப்பியர் முதல் இரண்டிற்கு மட்டிலும் விதி கூறி அவற். நினை விளக்கியுள்ளார். இறுதியாகவுள்ள மூன்றன் பெயரை அவர் சுட்டி உரைத்தனரேயன்றி அவற்றின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறவில்லை. உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் ஆகிய இரண்டன் இலக்கணத்கை அறிந்துகொள்வதை விட அவற்றை எடுத்துக்காட்டுக்கள் மூலம் அறிந்துகொள்வதே சிறந்தது. அவற்றைப்பற்றி விரிவான செய்திகளை அறிந்து கொள்ள விரும்புவோர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பயின்று அறிந்து கொள்வார்களாக. - உள்ளுறை உவமம்: முதலாவதாக, உள்ளுறை உவமம் இன்ன தென்பதை அறிந்துகொள்ள முயல்வோம். உள்ளுறை உவமம் அகப்பொருள் துறையில்தான் பெரும்பான்மை பயின்றுவரும். அகப்பொருள் பாடல்களில் ஒருவருடன் ஒருவர் பேசும் காதல் பற்றிய திகழ்ச்சிகளைப் பெரும்பாலும் உவமை வாயிலாகப் பேசும்படி கவிதைகளை அமைப்பது ஒருவித மரபு. உள்ளுறை உவமமாக அமைப்பதுதான் சிறப்பு என்று பண்டையோர் கருதி னமையால்தான் சங்கப் பாடல்களில் உள்ளுறையுவமம் மிகுந்து காணப்பெறுகின்றது. உள்ளுறையுவமத்தில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துக்கள் உள்ளே அடிப்படையாக உறையும் கருத்துக்களுக்கு உவமையாக வருமாறு அமைக்கப் பெற்றி ருக்கும். வெளிப்படை யுவமத்தில் உவமேயம் நன்கு தெரியும்; உள்ளுறை யுவமத்தில் உவமேயம் வெளிப்படையாகப் புலனா 1. தொல்-பொருளியல்:காத். 46 (இளம்) .