பக்கம்:பாட்டுத் திறன்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276. - பாட்டுத் திறன் கும். இந்த இரண்டு வகைத் தேனும் கற்பாறைகளிலுள்ள குழி களில் தேங்கிக் கிடக்கும். சில சமயம் குரங்குகள் தாகவிடாய் மிகுதியால் இத்தேனை நீர் என்று கினைத்து அளவுக்கு மீறிப் பருகிவிடும். இம்மதுவின் போதையால் மிளகுக்கெடி படர்ந் துள்ள சந்தனமரத்தில் ஏறமுடியாது மயங்கி அம்மரத்தின் கீழ் நல்ல பூக்களாலாகிய படுக்கையில் அயர்ந்து உறங்கும். இங்ங்ணம் பல்வேறு விலங்குகளும் கின்காட்டில் எதிர்பாராத இன்பத்தை அடையும். அத்தகைய நாட்டின் தலைவனே!' என்று தலைவனை விளித்துப்பேசத்தொடங்குகின்றாள் தோழி. தலைவன் நீண்ட நாட்களாகக் களவொழுக்கத்தில் ஒழுகி வருகின்றான். அவனை எப்படியாவது மணநெறி வழியாகக் கற் பொழுக்கத்தில் புகுத்தி விடவேண்டும் என்று கருதுகின்றாள் தோழி. இதைத் தலைவனிடம் கேரில் வெளிப்படையாகச் சொல்லாது குறிப்பாகப் புலப்படுத்துகின்றாள். நீரை எதிர் பார்த்து வந்த குரங்கு எதிர்பாராது தேனை உண்டதுபோலவே, விலங்கு வேட்டைக்காக வந்த தலைவன் தலைவியை அடைந்தான்; மான்வேட்டையை நாடிவந்தவன் மானின் நோக்கினையுடைய மைவிழியாளைப் பெற்றான். எல்லையற்ற இன்பப் பெருக்கால் குரங்கு தன் குலத் தொழிலாகிய மரம் ஏறுதலையும் மறந்து மலர்ப்படுக்கையில் அாங்குவது போலவே, தலைவனும் களவு ஒழுக்கமாகிய எல்லையற்ற இன்பவெள்ளத்தில் ஆழ்ந்துபல்லோர் அறியத் தலைவியை வரைந்து கொண்டு வாழவேண்டும் என்ற அறநெறியையும் மறந்து மயங்கி இருக்கின்றான். இவ்வாறு உள்ளுறை உவமத் தால் தோழி தலைவனை விரைவாகத் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணும்படி செய்துவிடுகின்றாள். தலைவனுடன் கடத்திய தோழியின் பேச்சில் வாழை, பலா, தேன்; சந்தன மரம் போன்ற குறிஞ்சி கிலத்திலுள்ள பொருள்களே வந்துள்ளன; குரங்கும் மலை காட்டில் காணப்படும் விலங்கே. எனவே, குறிஞ்சி, நிலத்தின் கருப்பொருள்களே அவளுடைய கூற்றில் வந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். கவிஞன் உள்ளுறை உவமையை அமைக்குங்கால் அந்தந்த நாட்டிலுள்ள கருப்பொருள்களைக் கூறும் முகத்தான் அதனை அமைப்பான். கேட்போருக்கு அப் பொருள்களின் தன்மைகளை வெளிப்படையாக எடுத்து வருணித்து உரைப்பது போலிருக்கும். ஆனால், அப்படிச்