பக்கம்:பாட்டுத் திறன்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பாட்டுத் திறன் பொதுவாகப் பல புலன்கலையும் கவரும் படிமங்களை இலக் கியங்களிலிருந்து காணலாம். கட்புலப் படிமங்கள் பல்வேறு படிமங்களிடையேயும் கட்புலத் தைக் கவரும் உருக் காட்சிகளே அதிகமாக உள்ளன. இவையே படிப்போரின் மனத்தில் நிலையான பதிவினை உண்டாக்கி வி டு கி ன் ற ன. கட்புல நரம்பு ஏனைய புல நரம்புகளை விடத்தடித் திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இக்காலக் கல்வியில் கட்புல-செவிப்புலத் துணைக் கருவிகள் அதிகமாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சுற்றுலா அமைத்து மாணாக்கர்களைப் பல்வேறு இடங்கட்கு இட்டுச் சென்று பல்வேறு காட்சிகளை நேரில் காணச் செய் கின்றனர். இலக்கியங்களில் கட்புலனைக் கவரும் ஒரு சில படிமக்காட்சிகளைக் கண்டு மகிழ்வோம். ஆழ்வார் பாசுரங்களில் முதலில் ஒன்றைக் காண்போம். பவ்வகீர் உடை ஆடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்விமா திரம்எட்டும் தோளா ந்ண்டம் திருமுடியா கின்றான்.பால் செல்ல ಹೆಗ್ (பவ்வம்-கடல்; உடை-இடுப்பு; பார் பூமி, அகலம் பரப்பு பவனம்-வாயு, மெய் உடல்; மாதிரம்-திசை) எம்பெருமான் உலக உருவமாயிருக்கும் நிலையைத் திருமங்கை யாழ்வார் அநுபவித்து மகிழ்கின்றார்.இப்பாசுரத்தில் எங்கும் பரவியுர்ள (விபுவான) எம்பெருமானுக்குக் கடல்.ே ஆடையாகின்றது; பூமிப் பரப்பெல்லாம் திருவடியாகின்றது; வளிமண்டலம் திருமேனியாகின்றது; திசைகள் எட்டும் திருத் தோள்களாகின்றன; தண்டகடாகம் திருவபிடேகமாகின்றது. இப்பேருருவம்-விசுவருப தரிசனம் போன்றது-கட்புல ف படிமக் காட்சியாக அமைந்துள்ளதைக் கண்டு மகிழலாம். கம்பராமாயணத்திலிருந்து இவ்வகைப்படிமம் அமைக் திருக்கும்பாடலொன்றினைக் காண்போம் .ே பெரி, திரு. 8. 6 : 3