பக்கம்:பாட்டுத் திறன்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£88 பாட்டுத்திறன் காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச் சோலையிலே, மலர்களில்ே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம்.எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள் மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம் தனில் அந்த கழகென்பாள் கவிதை தந்தாள்." பாவேந்தரின் இக்கவிதையில் காலை இளம்பரிதி, கடற்பரப்பு, ஒளிப்புனல், சோலை, மலர், மேற்றிசையில் இலகுகின்ற, மாணிக்கச்சுடர் ஆலஞ்சாலை, கிளியின் கூட்டம் இவற்றி லுள்ள சொல். அல்லது சொற்றொடர்களால் உணர்த்தப் பெறும் வண்ண வடிவக் கட்புலப் படிமங்கள் கவிதையைக்கவின் பெறச்செய்வன. செவிப்புலப் படிமங்கள் : காதினால் மட்டிலும் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்கள் இவை. ஆழ்வார்களிள் பாசுரங்களில் இத்தகைய படிமங்களைக் காணலாம். கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்த கலந்து போய்ப் பேசின. பேச்சரவம் கேட்டிலையோ? பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைகோத்து வாச கறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரவம் கேட்டிலையோ? காயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே! கிடத்தியோ? தேசம் உடையாய்! திறத்லோர் எம்பாவாய்." (ஆனைச்சாத்தன்-பரத்வாஜ் பட்சி; அரவம்-ஒலி; காசு -கழுத்திலணியும் அச்சுத்தாலி; பிர்ப்பு-ஆமைத்தால்; தேசம் --தேஜஸ்) r; - இப்பாசுரத்தில் கீசுகிசு என்ற ஆனைச் சாத்தனின் பேரரவம், காசும் பிறப்பும் கலகலத்தல், மத்தினால் ஒசைப்படுத்தின தயிரரவம், கேசவனைப்பாடுதல்-இவையாவும் செவிப்புலப் படிமங்களாகும். மேலும், இதில் வாச்ங்றுங்குழல்' என்ற காற்றப்புலப் படிமமும் தேதிம் உடையாய்' என்ற கட்புலப் படிமமும் கலந்து ஒரு கலவைப்படிமத்தை அநுபவிக்கின்றோம். க. அழகிள் சிசிப்பு- அழகு. 8, திருப். ?,