பக்கம்:பாட்டுத் திறன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290, - பாட்டுத் திறன் - வானம்பாடியின் இசையில் ஈடுபட்ட பாவேந்தர் படைத்த சொல்லோவியம் இது: "வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா? தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி கல்லிசை கல்கிற்றா?கடுங்கும் இடிக்குரலும் மெல்லிடை பயின்று மிகஇனிமை தந்ததுவோ? வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன் தானுதும் வேங்ய்குழலா? யாழா? தனியொருத்தி வையத்து மக்கள் மகிழக் குரலெடுத்துப் பெய்த அமுதா?” இதில் வானம் பாடுதல், வானிலவு பாடுதல், சிறுதும்பி கல்விசை நல்குதல், கடுங்கும் இடிக்குரல், மெல்லிசை பயிலுதல், தமிழி சைஞன் ஊதும் வேய்ங்குழல், தனியொருத்தி குரல் எடுத்துப் பெய்த அமுது - இதில் பல்வேறு வமைப் படிமங்களை நம்முன் கிறுத்திக் கவிதையைக் கவர்ச்சியுடையதாக்கிவிடும் அற்புதத்தைக் கண்டு அதிசயிக்கின்றோம். சுவைப் புலப்படிமங்கள் : சுவை உணர்ச்சிகளை எழுப்ப வல்ல படிமங்கள் இவை. இறைவனே ஆராவமுதனாக' இருக்கும் போது அவனைப் பற்றிதுவலும் ஆழ்வார் பாசுரங் களில் இத்தகைய படிமங்கள் அதிகமாக இருப்பதில் வியப் பில்லை. வேங்க டத்து அரி வைப்பரி கீறியை வெண்ணெய் உண்டுஉர லின் இடை ஆப்புண்ட தீங்க ரும்பினை, தேனைகன் பாலினை அன்றி என்மனம் சிந்தைசெய் யாதே" (அரி-சிங்கம்;பரி-குதிரை, கீரியை-கிழித்தவனை; ஆப் புண்ட-கட்டுண்ட) - திருமங்கையாழ்வார் திரு கறையூர் எம்பெருமானை அதுபவிக்கும் பாசுரம் இது. வெண்ணெய் உண்ணல் சுவைப்புலப்படிமம். எம் பெருமானைக் கரும்பு, தேன், பால் என்று உருவகம் செய்யும் பொழுது சுவைப்புலப் படிமங்கள் நம் மனத்தில் எழுகின்றன. அவனை அப்பொருளாகவே அநுபவித்து மகிழ்கின்றோம். 9. பாரதிதாசன் கவிதைகள்- இரண்டாம் ெ </ !தாகுதி - வானம் பாடி, 10. பெரிதிரு.?.3:5 經