பக்கம்:பாட்டுத் திறன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் jø காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ-காதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ! ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை.2 கார்க்கோடகனை விட்டுப் பிரிந்த நளன் ஒரு கண்டினைப் பார்த்துக்கூறுவதாக அமைந்தது இப்பாடல். முதலடியில் கான்கு சீாகளிலும் மோனை அமைந்துள்ளதால் இது முற்று மோனைத் தொடையாகும். இரண்டாவது அடியிலும் மூன்று. சீர்களில் மோனை அமைந்துள்ளது. முந்துணர்வெம் பணிக்கொடியோன் மூதூரின் கடந்துழவர் முன்றில் தோறும் கந்துணரும் புனல்நாட்டின் திறம்வேண்டு; நாடொன்றும் கல்கா னாகில் ஐந்துணர்வேண் டவையிலெனில் ஐந்திலம்வேண் டவைமறுத்தால் அடுபோர் வேண்டு; சிந்துரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த செங்கண் மாலே.24 இப் பாடலிலுள்ள பல்வேறு மோனை எதுகைத் தொடைகள் பாட்டின் ஒலிநயத்திற்குத் துணை செய்வதுடன் பாட்டின் சுவை யையும் மிகுவித்துப் படிப்போரிடம் உயர்ந்த பாட்டனுபவம் தோன்றுமாறு செய்தலை அறிக. குறிப்புப் பொருள் : குறிப்புப் பொருள்களில் உள்ளுறை யுவமையும் இறைச்சியும் கவிதையில் பயின்று வருகின்றன; பெரும்பாலும் அகப்பொருட் பாடல்களிலேயேஇவற்றைக்காண லாம். ஆழ்ந்த அறிவில்லாதவர்கள் இவற்றை அறிதல் அருமை. உள்ளுறையில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகள் உள்ளே அடிப்படையாக உறையும் கருத்துகளுக்கு உவமையாக வருமாறு அமைக்கப் பெற்றிருக்கும். w கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர!?? 28. நளவெண்க-4ே9 . 24. வில்லிபாரதம்-விருட்டிணன் தாது-11 25, நற்றிண்ை-280

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/31&oldid=812697" இலிருந்து மீள்விக்கப்பட்டது