பக்கம்:பாட்டுத் திறன்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-17 சுவைகள்’ கவிதையையைக் கனிவித்துப் படிப்போருக்கு இன்பத்தை அனிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. அந்த உணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும் பொழுது பொங்கிவரும் இன்பத்தைத்தான் தமிழ் இலக்கண நூலார் மெய்ப்பாடு என்ற சொல்லால் குறித் தனர்; வடமொழியாளர் இதனை ரஸ்ம்' என்று வழங்குவர். மெய்ப்பாடு பற்றிய செய்திகளைத் தொல்காப்பியப் பொருளதி காரத்திலுள்ள மெய்ப்பாட்டியலில் காணலாம். அங்குக் குறிப் பிடப் பெறும் மெய்ப்பாடுகள் வட நூலினுள் காணப்பெறும் ரஸ்ம், பாவம் என்னும் இருவகையுள் அடங்கும், தமிழில் இவற்றை முறையே சுவை என்றும் குறிப்பு என்றும் வழங்குவர் உலகப் பொருள்களைக் காண்பது ஒருங்லை; அவற்றைக் கண்டு இன்புறுவது மற்றொரு நிலை; ஒவ்வொருவரும்பொருள் களைக் கண்டு மகிழ்வதற்கும், மகிழாது இருப்பதற்கும் அவரவ ருடைய மனநிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையிலிருப்பதில்லை. அன்து இன்ப முற்றிருக்கும் பொழுது உலகமே இன்பமயமாகத் தோன்றும்; துன்ப முற்றிருக்கும் பொழுது உலகம் துன்பமயமாகக் காட்சியளிக்கும். ஆனால் மனம் இன்பத்திலும் துன்பத்திலும் கிலைத்திருப்பதில்லை. அது பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்பதுன்பங்களை நு:பவிக்கின்றது. இவ்வாறு மனம் தொன்று தொட்டு எ த்لإلكي. தன்ையோ பொருள்களை அநுபவித்துள்ளது; மனம் அப் பொருள்களை அது விக்கும்பொழுது அஃது அநுபவித்தவாறு அப்பொருள்கள் தமது உருவத்தை நம்மனத்தில் செதுக்கி

  • இந்த இயல் பன்மொழிப் புலவர் உயர் திரு. வே. வேங்கடனா ஜூலு: 'ரெட்டியார் அவர்கள் யாழ்ப்பாணம் "ஆசிய திராவிட تهr هg = 3 விருத்திச் சங்க வெள்ளிவிழா மலரில் (1950) எழுதியுள்ய சுவையியல்' என்ற கட்டுரையைப் பெரும்பாலும் தழுவியும் வேறுசில செய்திகளைச் சேர்த்தும் எழுதப்பெற்றது.