பக்கம்:பாட்டுத் திறன்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டித் திறன் 305 பாவங்களுள் கேடுறாமல், இரசமாகிச் சமையுமளவும் நிலை நிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் (நிலைபேறுடைய பாவம்) எனப் படும். அது காதல், சோகம் முதலிய ஒன்பது வகைப்படும். உலகியலில் உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரண மாயும் காரியமாயும் துணைக் காரணமாயும் இருப்பவை, கவிஞ னின் வாக்கிலும் நடிப்போன் அயிநயத்திலும் அறிவிக்கப்பெறும் பொழுது, முறையே விபாவம் என்றும், அதுபாவம் என்றும், சஞ்சாரி பாவம் (நிலைபேறில்லாத பாவம்) என்றும் வழங்கப் பெறும்.அஃதாவது, காரணம்-விபாவம் காரியம்-அதுபாவம் துணைக்காரணம்-சஞ்சாரி பாவம். என்று வழங்கும் என்பது. இவ்விபாவ அலுபாவங்களால் வெளிப்படுகின்ற ஸ்தாயி பாவமே ரசம் அல்லது சுவை என்னும் பெயர் பெறும். மேற்கூறிய விபாவம் இருவகைப்படும். காதல் முதலாயின தோன்றுதற்குச் சார்பாயிருக்கும் பொருள் ஆலம்பன விபாவம் எனப்படும். தோன்றிய காதல் முதலியனவற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்திபன விபாவம் எனப்படும். காதலுக்குத் தலைவன் தலைவியர் ஆலம்பன விபாவம். அவர்களுடைய உரு வின் சிறப்பு அணிகலன் முதலியனவும், தென்றல் கிலா கட லொலி முதலியனவும் உத்தீபன விபாவம். - இனி. காரியமாகிய அதுபாவமும் இரண்டு வகைப்படும். ஒன்று, அகத்தது; மற்றொன்று, புறத்தது. அந்தக்கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற் பிரிவிற் 1. ஒற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலைபெறுதலாவது-ஒரு மாதினைக்கண்டு அவளிடம் காதல் கொண்ட்ானொருவன் பின்னர் வேறொரு மாதினைக் காணும் பொழுது பின்னவள்பால் காதல் செலுத் தாது, முன்னைய மாதின் நினைவு உண்டாகி , அவள்பால் காதல் கொள்வது. வேற்றுமையுடைய பாவத்தால் கேடுறாமல் நிலை பெறுதலர் வது. ஒரு மகள் பால் காதலித்தான் ஒருவன் பின்னர் இளமகள் ஒருத்தியின் சாவு , பிரிவு முதலியவற்றைக் கண்டிவிடத்தும், அவற்றால் சோகமுப் வேறுப்பும் உண்டாகி, முன் காதலிக்கப் பெற்ற வளிடத்து முன்னைய காதல் கெடாதிருப்பது. பா.-30