பக்கம்:பாட்டுத் திறன்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 பாட்டுத் திறன் என்று பாடுகின்றகர், உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடு பட்டுல் படிப்போரிடம், கவிஞர்களின் அநுபவத்தையே பெற வைத்து விடுகின்றன; அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மை களையும் உணர்த்திவிடுகின்றன.தமிழ் இலக்கியத்தைப் பொறுத் தமட்டிலும் தமிழ்க் கவிஞர்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத் துவதே இலக்கியத்தின் நோக்கம் என்ற கொள்கையினையுடைய வர்களாக இருந்தனர் என்று சொல்லலாம், உரத்தின் வளம்பெருக்கியுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டங் தீர்க்குநூ ல:தேபோன் மாந்தர் மனக்கோட்டக் தீர்க்கு நூன் மாண்பு.* என்ற வெண்பாவால் இதனை நன்கு அறியலாம். இதனால் மக்களினத்தின் அறியாமையைப் போக்கி அறிவு கொளுத்துதல் கவிதையின் முதன்மையான வேலையாயிருத்தல் வேண்டும் என் பது பெறப்படுகின்றது. மேலை நாட்டினர் படிக்கும்போது இன்பத்தை யுண்டாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாடல் களை ஒரு பகுதியாகவும், ஒழுக்கம் உணர்த்தும் பாடல்களை மற்றொரு பகுதியாகவும் கொண்டுள்ளனர். பின்னையதை அறங்கூறும் கவிதை" என்று கூறுவர். அத்தகைய தனியான பாகுபாடு தமிழ்க் கவிதைகளில் காண்பது அரிது. எனினும், இடைக்காலத்தில் தோன்றிய பழமொழி, ஆசாரக்கோவை, திரி கடுகம், கான்மணிக்கடிகை ஆகிய நூல்களை நோக்கும்போது இத்தகைய ஒரு பிரிவு தமிழ்க்கவிதைகளுக்கும் தேவை என்று கினைக்க வேண்டியுள்ளது. உரைநடை அதிகம் பயிலாத காலத் தில் பாட்டைக்கருவியாகத் கொண்டுஅறிவுரை வழங்கி வந்தனர்; பாட்டு வடிவம் சினைவுC.ர்தலுக்கும் துணையாக இருந்தது. இவை பாட்டு வடிவில் இருப்பினும் சிறந்த கவிதைகள் ஆகா. இவற்றை வெறும் திேகளையும் கொள்கைகளையும் கொண் டுள்ள பெட்டகங்கள் என்று கொள்ள வேண்டுமே யன்றி உள் - ளத்தைத் தொடும் கவிதைகள் என்று கூறமுடியாது. தமிழ்க் கவிதைகளில் பெரும்பான்மையானவை பயிலும் போது இன்பங் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பை 4. தன்னுல்-25. க. அதங்கூறும் கவிதை-Didacle poetry.