பக்கம்:பாட்டுத் திறன்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாட்டுத் திறன் காவியங்கள் உண்மைகளை உணர்த்துபவை: கவிஞன் காட் டும் வாழ்க்கையும் குறிக்கோள் தன்மையுடையதே. வாழ்க்கை எவ்விதம் அமைந்தால் நலம் என்று கவிஞன் கருதுகிறானோ, அங்ங்னமே அக் குறிக்கோளையும் ஆக்குகின்றான்; அதற்கேற்ற வாறு கவிதைகளையும் தொடுக்கின்றான். நம் காட்டுக் காவியங் கள் யாவும் இந்த அடிப்படையிலே எழுந்தவை. நெஞ்சையள் னும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய தலைசிறந்த கவிதை களில் ஒன்று.சிலம்பு காரணமாக எழுந்த அக்கதையை உலகோர் புகழும் பெருங்காப்பிய வடிவில் இளங்கோவடிகள் ஆக்கித் தக் துள்ளார். மூன்று பெருநீதிகளை அடிப்படையாகக் கொண்டு நூல் இலங்குகின்றது. 'அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் துட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டைச் செய்யுள்? எனக்கூறி இளங்கோவடிகள் நூலைத் தொடங்கினார் என்று பதிகம் கூறுகின்றது.இவ்வறவுரைகளை நிலைநாட்ட இளங்கோ வடிகள் நூலைப் படைத்தாலும், அதைப் பயில்வாருக்கு இக் நீதி நினைவே தோன்றுவதில்லை. இந்திேகளைக் கலையுணர்ச்சி யுடன் கலந்து கவிதையில் பின்னிவிட்டார் அடிகள். வெறும் திே யாக மட்டிலும் இருந்தால் படிப்போருக்கு வெறுப்பையே உண் டாக்கும். நீதி கலைப்பண்புடன் சேர்ந்து விட்டதால் படிப்போர் அறியாமலே அஃது அவர் மனத்தில் புகுந்து அவர் வாழ்க்கையைச் செம்மைப் படுத்தி கிற்கும். இது பல ஊட்டச்சத்துச்களை யுடைய வலிமை தரும் மருந்தினை (டானிக்) உண்பது போலா கும். அதைச் சாப்பிடுங்கால் மருந்தினை உண்பது போன்ற உணர்ச்சி நம்மிடம் தோன்றுவதில்லை யல்லவா? வாழ்க்கையின் உயர்ந்த அடிப்படை உணர்ச்சிகளாகவுள்ள அன்பு.வீரம்,காதல், தியாகம் போன்ற பண்புகள் அமைந்துஅவற்றின் வாயிலாக உயிர் கள் எல்லாவற்றினுடனும் இயைந்துஉணரும் விழுமிய அநுபவம் பெறத்தக்கதாக விளங்கினால்தான் கவிதை சிறந்த நிலைத்த இன்பம்தருவதாகின்றது.இந்த விழுமியுஉணர்ச்சியின்அடிப்படை யில் அமைந்த கவிதை தான் பெருங்கவிதை என்ற நிலையையும் | 22, uติตth - ๑ f (55-60).