பக்கம்:பாட்டுத் திறன்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாட்டுத் திறன் கொட்டி கம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இத் தகையஉணர்ச்சிதான் காவியங்களிலும் அமைந்து கிடக்கின்றது. ஒழுக்கம், அறம் முதலியவற்றை அதிகமாகச் சொற்களால் கூறி வற்புறுத்தாமல் கற்பனையநுபவத்தின் வாயிலாக அப் பாடல் கள் உள்ளத்தில் தாமே சென்று பதியும் முறையில் அமைந்து விடுகின்றன. மேற்கூறியவற்றை விளக்கும் முறையில் ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைக் காண்போம். முதல்நாட்போரில் இராவணன் இலக்குவன்மீது அயனிடம் பெற்ற வேற்படையை ஏவி அவனை மூர்ச்சையடையச் செய்கின்றான். இராமனுக்குக் கடுஞ்சிற்றம் கனன்று எழுகின்றது. அனுமன் தோளில் ஏறிக் கொண்டு. இராவணனுடன் பெரும் போர் புரிந்து அவன் சேனை முழுவதையும் றோக்குகின்றான்; இராவணன் முடிகளைத் தகர்த்தெறிந்து அவனையும் கிராயுதனாக்குகின்றான். அப் பொழுதுள்ள இராவணன் நிலையைக் கம்பநாடன், அறங்க டந்தவர் செயலிதென் றுலகெலாம் ஆர்ப்ப கிறங்க ரிங் திட நிலம்விரல் கிளைத்திட கின்றான்” என்று காட்டுகிவான். இதில் முதலடி இராஷ்ணனது கொடுமை களையெல்லாம் அடக்கிக் கா ட்டுதலைக்காண்க. மீண்டும் இராமன் வாய்மொழியாக, f அறத்தி னாலன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தி னாலரி(து) என்பது மனத்திடை வலித்தி”* என்று கம்ப காடன் கூறும் திே, உலகம் உள்ளளவும் மன்பதைக்கு அறவுரையாக விளங்கும் என்பதில் என்ன தடை: இலக்குவனது 'கற்றாதையும் தனி நாயகனும் பெற்றாயு மான இராமன் காட்டிற்குப்போக கேரிட்டதைக் குறித்து இலக்குவன் சிற்றங்கொண்டு நிற்கின்றான். 'கால்தாக்க கிமிாந்து புகைந்து கனன்று பொங்கும் ஆறாக்கனல் போல்

  • யுத்தகா-முதற்போர்.செய் 250 24 டிெசெய் 252.