பக்கம்:பாட்டுத் திறன்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பாட்டுத் திறன்

  • அருள் தீர்ந்த காட்சியா னறநோக்கா னயஞ்செய்யான் வெருவுற வுய்த்தவன் கெஞ்சம்போல் பையய இருள்துர்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர உரவுக்கை மருங்கித்தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் கெஞ்சம்போல் புல்லென்று புறமாறிக் கரப்பவன் நெஞ்சம்போல் மரம்எல்லாம் இலைகம்பத் தோற்றம்சால் செக்கருட் பிறைநுதி எயிறாக காற்றிசையு நடுக்குறுஉ மடங்கற் காலைக் கூற்றுகக் கதுபோலும் உட்குவரு கடுமாலை”* என்று கூறுவர். தகுதியுள்ளவன் ஒருவன் இயல்பாக ஒரு வரிடம் கைப்ேடி இரக்கக் கூடாதவனாக இருந்தும் தனது கொடிய வறுமையினால் இரக்க நேரிடுங்கால் அவன் உள்ளம் எவ்வளவு ஆற்றல் மடங்கி மெலிந்து விடுகின்றது என்னும் உண் மையைப் பகலெல்லாம் ஒலிவிளக்கத்தோடு ஆண்மையாய் விளங் கிய மரங்கள் மாலையில் அவ்வொலி யடங்கிப் பொலிவிழந்த தனோடு ஒப்பிட்டிருக்கின்றார். அப்படிப்பட்டவனது அருமை யறியாது பொருளுடையவருள் சிலர் வள்ளன்மையின்றித் தம் பொருளை மறைத்துக் கொள்ளும் குவிந்த கெஞ்சுடையவர்களா யுள்ளனர் என்னும் கருத்தை அந்த மாலைக்காலத்து மரங்களி லுள்ள கிளைகள் குவிந்து காணப்படுவதனோடு உவமித்து; கூறியுள்ளார் கவிஞர்.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கவிதையின் சிறப் புக்கு ஒசை சொல்லடுக்கு முதலியவை இன்றியமையாதனவாக இருப்பினும், கவிதையின் பொருளமைப்பே முக்கியமாகக் கொள்ளப்பெறுகின்றது. தமிழர்கள் இன்பம் என்ற சொல்லுக் குக் கண்டபொருள் சற்று ஆழமுடையது. நிலைபேறுடைய இன்பத்தைத் தருவது எதுவாயினும் அஃது உண்மையும் ஆழ மும் உடைதாயிருத்தல் வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. மேனாட்டுத் திறனாய்வாளர்களிலும் சிலர் இக்கொள்கையை யுடையவர்கள். 'கவிதையை ஆராயுங்கால், கம்முடைய முதற் கவனம் கவிஞன் பால் செல்ல வேண்டும்; அவனுடைய ஆளுமை யிலும் அவன் உலகைப்பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மை யினும் செல்ல வேண்டும்; வாழ்க்கையை எவ்வாறு நோக்கி விளக்கந்தருகின்றான் என்பதைக் கவனித்தல் வேண்டும். இது வெளிப்படையாகவும் இருக்கலாம்; குறிப்பாகவும் இதனைப் 34. நெய்தற்கலி 8,