பக்கம்:பாட்டுத் திறன்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 பாட்டுத் திறன் ஓரிரண்டு வருஷ நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லார்க்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள், குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்' என்று அவர் தம் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள முகவுரைப் பகுதியாலும் அவருக்குப் புதுக்கவிதை'யில் இருந்த பேரவா புலனாகும். இத்தகையதோர் அவாவைக் கொண்ட கவிஞரே ‘புதுக்கவிதை'யைத் தோற்றுவித்த தந்தையுமாகின்றார்; முன்னோடியாகவும் திகழ்கின்றார். தமது கவிதையுணர்வுகளையும் அகத்தெழுச்சிகளையும், கனவுகள், கற்பனைகள், முற்போக்கு எண்ணங்கள், சமுதாயப் பார்வைகள், நாட்டு கிலைகள் ஆகிய அனைத்தையும் மரபுநிலை கெடாத, எளிய இனிய, புதிய புதிய யாப்புகளில், சந்த யங் கட்கு உட்படும் பல்வேறு புதிய கவிதை வடிவங்களில் வெளிப் படுத்திய பாரதியார் இலக்கண விதிகட்குக் கட்டுப்படாத புதிய வடிவத்திலும் படைக்க முயன்றுள்ளனர். எ-டு வசன கவிதை' என்ற பகுதியிலுள்ள காட்சிகள்' என்ற கவிதைத் தொகுப்பு. இதிலுள்ள கவிதைகள் வசனத்தை மீறியவை.ஆயினும், கவிதை யின் முழுத் தன்மையை எய்தாத ஒரு புதிய முயற்சியாகவே படைத்துள்ளார் என்று கருதலாம். ஓர் உணமையை, ஈண்டு நாம் சிந்திக்கவேண்டும். வசனம், செய்யுள் ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டது கவிதை. வசனமும் செய்யுளும் கவிதை இயங்கும் தளங்களாகும். இவை இரண்டும் கவிதையின் புறவடிவங்கள்; கவிஞன் கையாளும் ஒருவித சாதனங்கள் (Devices). இந்த இரண்டு சாதனங்களில் மட்டிலும் கவிதையைக் காண இயலாது. இவற்றைக் கவிஞன் கையாளும் முறையில்தான் கவிதை தென்படும். படைப்புத்திறம் மிக்க கவிஞனுக்குச் செய்யுளில் கவிதை கிடைக்கும்; வசனத் திலும் கவிதை கிடைக்கும். இன்று மரபுக் கவிதையாளர்கள் எழுதும் புதுக்கவிதைகளில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். ஊன்றி நோக்குவார்க்கே இது தட்டுப்படும். காடு உடுத்தியிருந்த நாலு வர்ணத் துணிகளைஅவன் தான்