பக்கம்:பாட்டுத் திறன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாட்டுத் திறன் உள்ளத்தளாய் முதிர்ந்த நிலையினளன்றி, கண்டுடன் இடி விளையாடும் இளம் பருவத்தினள் என்பதும், அதனாற் பிரிவிடைப் பெருந்துயருறும் இயல்பினள் என்பதும், மிக்க அழகுடையவள் என்பதும் உணர்த்தப்பெற்றன. மற்றும், அலவனோடு ஒட இயலாமல் தளர்ந்தனள் என்றதனால் தலைவி யின் மென்மைத் தன்மையும் புலப்படுத்தப் பெற்றது. உயவினன் சென்று யான் உள்நோய் உரைப்ப' என்பதனால் அத்தகைய இளமையும் அழகும் மென்மையும் உடைய தலைவியைப் பிரிதலில் தலைவனுக்குள்ள வருத்த மிகுதியும், அங்ங்னம் வருந்தியும் பிரியக் கருதினமையின் பிரிதற்குரிய வினையின் இன்றியமையாமையும், செல்லுமிடத்து நீட்டித்த வின்றிக் குறித்த காலத்து வினை முடித்து மீண்டு வருவன் என்ற குறிப்பும் உணர்த்தப் பெற்றன. மறுமொழி... மடகிலையே' என்பதனால் தலைவி மறுமொழி கூறுதற்கும் ஆற்றாக நிலையில் அறிவு மயங்கித் துயர் பெரிதுடையளாயினள் என்பதும், பூங்கொத்தும் இளந் தளிரும் பறித்துப் பிசைக் துதிர்த்தனள் என்றமையால் சொல்வதும் செய்வதும் மயங்கினார் தன்மை இன்னதென்பதும் உணர்த்தப்பெற்றன. இவ்வாறுள்ள தலைவியின் நிலையை அழகிய மடப்பத்தோடு கூடிய விலை என்றான் தலைவன். இங்கிலை அவனுக்குக் காண்டற்கு இனிமை பயத்தது. காரணம், தலைவன் பிரிவில் தலைவியின் துன்பநிலை அவளது அன்பின் ஆழத்தை அவன் உணர்தற்கேதுவாகலின் இங்கிலை அழகிய நிலையாயிற்று. இனி, அழகுடையார் எங்கிலையிலும் அழகுடையராகவே விளங்குவர் என்னும் கொள்கைக்கேற்பத் தலைவி துன்பங்லையி லும் அழகுடையளாகவே விளங்கினள் என்பதுணர்த்த ஆய்மட கிலை' எனப்பட்டது என்று கூறினும் அமையும். ‘அறிதலும் அறிதியோ பாக’ என்பதனால் இங்ங்ணமிருந்த தலைவியின் கிலையும், அவட்கு வருத்தத்தோடு சென்றுரைத்த தலைவன் நிலையும் (பாகன் பெரும்பாலும் தலைவனுடன் இருப்பவனாதலின்) பாகன் அறிந்திருத்தல் கூடும் என்பதும், அங்ங்னம் அறிந்துவைத்தும் தலைவன் தலைவியை விரைவிற் சென்றடையுமாறு, குதிரை இயல்பில் விரைவாகச் செல்வதாயி னும் அதனை மேலும் துண்டி விரையச் செலுத்தாமை தவறென்பதும், அங்ங்ணம் செலுத்துமாறு தலைவன் குறிப்பால் உணர்த்துகின்றான் என்பதும் புலப்படுத்தப்பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/36&oldid=812809" இலிருந்து மீள்விக்கப்பட்டது