பக்கம்:பாட்டுத் திறன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 35 மற்றும், பெருங்கடல்...வெறிகொள' என்பது அங்கிலத்து இயற்கை கலன் உணர கிற்றல் காண்க. இப்பாடலில், பாகன் தலைவனுடைய ஏவலாளனாயினும் தலைவன் அவனுக்குத் "தேரை விரைவிற் செலுத்து' என ஆணையிடாது அவன் குறிப்பானுணர்ந்து செய்யுமாறு கயம்படக் கூறியிருக்கும் அழகும் உணர்ந்து மகிழ்வதற்குரியதாகும். ஆகவே, சொல்லும் முறை பெரிதாக நிற்கின்றதேயன்றி, சொற்பொருள் அவ்வளவு இன்றி யமையாததாக இல்லை. மேற்கூறியவாறு கவிதையின் சொற்கள் வரையறுத்த பொருளைவிட்டு நெகிழ்ந்து குறிப்புப் பொருளையும் தழுவற் பொருளையும் உணர்த்துவதற்குக் காரணம் என்ன? காரணம் உளவியல்பற்றியது; புலன்காட்சிக் கொள்கையை யொட்டி இது அமைகின்றது. சொற்களின் பொருள் வரையறுக்கப் பெற்றது; அவற்றின் பொருளை அகராதியும் குறிக்கின்றது. ஆனால், கவிதையின் அநுபவம் எல்லையின்றி விரிவடையக் கூடியது; அது கவிதையைப் படிப்போரின் அறிவுக்கும் அநுபவத் திற்கும் ஏற்ப மாறி அமையக்கூடியது. இதனால்தான் திருக்குறளுக்குக் கருத்துரை வழங்கிய செயலுார்க் கொடுஞ் செங்கண்ணனார் என்ற புலவர், உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு.: என்று கூறினார். கம்முடைய மொழியில் உள்ள சொற்கள் மிகக் குறைவு; அனுபவ வேறுபாடுகள் அத்தனையும் உணர்த்தும் ஆற்றல் இல்லாதவை. கிறமாலையில் ஏழுவண்ணங்கள் உள என்று கூறுகின்றோம். உலகில் எத்தனையோ வண்ண வேறு பாடுகள் உள்ளன. அவற்றைக் குறிப்பதற்குச் சொற்கள் இல்லை. மாப்பிள்ளை கறுப்பு: பெண் சிவப்பு' என்று சொல்லும்போது 'கறுப்பு', 'சிவப்பு' என்ற சொற்கள் உணர்த் தும் பொருள் சொல்லுவோர் மனத்தில் அமைந்துள்ளதேயன்றி அச்சொற்கள் குறிக்கும் அகராதிப் பொருளிலன்று எனவே மொழியிலுள்ள சில சொற்களே குறிப்புப் பொருளாலும் தழுவற் பொருளாலும் அனுபவத்திற்கேற்றவாறு விரிவும், 30. Theory of perception. 33. திருவள்ளுவமாலை .ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/37&oldid=812829" இலிருந்து மீள்விக்கப்பட்டது