பக்கம்:பாட்டுத் திறன்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 367 காட்டு விடுதலைபற்றிப் பாடப் பெற்றுள்ள புகழ் வாய்ந்த இச் கவிதையில் சுருக்கத்தின் மிகு பலத்தைக் காணலாம். 'மனைவி' என்ற கவிதையில் வரும், குடும்ப ஆட்சியைப் பிடிப்பதற்காகதாய்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்த தனிக் கட்சி...... а ф e 9 а а 3 в а е : ஒரு மாநில அரசு அளவிலேயே தன் மணாளனை கடத்திக் கொண்டிருக்கும், மத்திய அரசு! என்ற பகுதிகள் சுருக்கத்திற்கு நல்ல எடுத்துக் காட்டுகள், இக்கூறியவற்றால் இறுக்கமான யாப்பு முறைகள் செங் கோல் செலுத்தி வந்த காலத்தில் பிறந்த மரபுக் கவிதைகள் கொண்டிருக்கும் வடிவத்திற்கும், புதுக்கவிதைகளின் வடிவத்திற் கும் மிகுந்த வேறுபாடுகள் இருப்பதை அறிகின்றோம். படிமம், குறியீடு, தெளிவு, சுருக்கம் ஆகிய உத்திகளைக் கொண்டு புதுக் கவிதைகள் கோலம் கொள்ளுங்கால் அவை உண்மையிலேயே புதுக் கவிதைகளாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்கின்றோம். 18. பொய்க்கால் குதிசைக்ன்-பீக் 144