பக்கம்:பாட்டுத் திறன்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பாட்டுத் திறன் டக்கம் பெருமிதம், விசாலம் என்ற பண்புகளைப் பெற்றுள்ளது! இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்துகின்றவர்களால் புதுக் கவிதை சிறுமையையும் காண்கின்றது. இன்றைய புறவாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு பிரச்சினைகள், உண்மை நிகழ்ச்சிகள் புறவாழ்க்கையுடன் கின்று போவதில்லை. அவை கம் அகவாழ்க்கையிலும் ஊடுருவுகின்றன; எதிரொலிக்கின்றன. அவை நம் அன்றாட வாழ்வில் தலை நீட்டி கம் இன்பதுன்பங்களை அறுதியிடுகின்றன: அவை நம்முடைய வறுமை, வளம், காதல், நட்பு, பக்தி, தத்துவ ஆய்வு ஆகியவற்றி லெல்லாம் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. ஆகவே, ஒவ் வொரு படைப்பாளியும்-புதின ஆசிரியர்கள், சிறுகதைச் சிற்பி கள், கவிஞர்கள் ஆகியோர்-சமூகச் சுற்றுப்புறச் சூழலை உற்று நோக்குகின்றனர்; பருந்து நோக்கில் பார்க்கின்றனர்; துணுக்க மாகவும் தம்பார்வையைச் செலுத்துகின்றனர். வினாக்களை எழுப்புகின்றனர்; விசாரணை செய்கின்றனர்; நம் வாழ்க்கையில் மாற்றங்களை விளைவிக்கும் புறக் கூறுகளில் தம் சிந்தனையை விரிக்கின்றனர். எனவே சுதந்திரம், ஜனநாயகம், ஜனநாயக சோஷலிசம், ஆட்சி அமைப்பு போன்ற நம் கட்டமைப்பை இன்று வழி கடத்தும் அரசியல், இதன் விளவுகளான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள், இவற்றால் உருவாகும் கடை முறை வாழ்க்கை ஆகியவை கம் புதுக் கவிஞர்களின் பரிசீலனைக்கு உட்படுகின்றன.இன்றைய வாழ்க்கைப்பிரச்சினை களான வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி கடத்தல், கலப்படம், கையூட்டு, சமூகப் பொறுப்பின்மை, அர் யாமை என்ற பல துறைகளிலும் புதுக்கவிஞர்கள் தம் பார்வை யைப் பதிக்கின்றனர். தம் கவிதைகளையும் வார்க்கின்றனர். தம் சொற்களில் இவை விளைவிக்கும் உணர்ச்சிகளை வார்ப்படம் செய்கின்றனர். சமூகத்தில் வாழும் நமக்கும் கவிஞர்கட்கும் சம அநுபவங் கள் கிட்டுகின்றன. கவிஞர்கள் இவற்றைச் சொ ற்படங்களாக்கும் போது, படிப்பவர்களாகிய நம்முடைய அங்கீகாரம் அச் சொல்லோவியங்கட்குக் கிடைத்து விடுகின்றது. நடப்பியல் வாழ்க்கை அநுபவங்கள் இயல்பான அழுத்தத்துடன் சித்திரிக்கப் படுவதன் மூலம் கவிதைகளாக வெளிப்படுங்கால் நாமும் கவிஞர் களுடன் சேர்ந்து சமூகப் பிரச்சினைகளைச் சிந்திக்கத் தொடங்கு