பக்கம்:பாட்டுத் திறன்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 பாட்டுத் திறன் ஜனநாயகத்தில் சைத்தான்களுக்கும் வேதமோதச் சந்தர்ப்பம் கிடைப்பதால் கோட்சேக்கள் கூட உனக்கெதிராய்க் காந்தியின் பெயரை ஜெபிக்கிறார்கள். நேருவைக் குறைகூறிவந்த ஒரு கும்பலுக்கு "சாட்டையடி’ கொடுக்கும் கவிதை இது. 3. ஜனநாயக சோஷலிசம், எல்லா அரசியல் கட்சிகளுமே எழுப்பிவரும் மாய மந்திரம் இது. தேர்தல் காலத்தில் காது புளிக்க இப் போர்க்குரலைத் தெளிவாகக் கேட்கலாம். 'குழந்தை' என்ற தலைப்பில் ஒரு கவிதை: பிறந்த குழந்தைக்கு கண்ணில்லை...! வாயில்லை. வவிறுமில்லை...! கை கான்கு...காலெட்டு...! அது இல்லை! ஆனால் பிறந்தது குழந்தையாம்! இது சோரம் போன ஜனநாயகம் பெற்றெடுத்த சோஷலிசக் குழந்தை. கவிதையிலுள்ள படிமஉத்தி நடப்பு அரசியலைப் பளிச்' செனக் காட்டுகின்றது. பாரத சமுதாயம்' என்ற தலைப்பில் ஒரு கவிதை. அரசியல் அங்காடியிலே முரசொலிகள் எதிரொலிகள்... பிரசவித்த குறைக் கருக்கள், பித்தலாட்ட மோடிமஸ்தான். க. விதி (அம்பி). பக். 17, 8. புதுக்கவிதை.போக்கும் நோக்கும் பக். 112