பக்கம்:பாட்டுத் திறன்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3?5 என்ற கவிஞர் மு. மேத்தாவின் இக்கவிதை ஜெயவர்த்தனாவின் அரசியல் கயவாளித்தனத்தை அப்பட்டமாகப் பிட்டு வைக் கின்றது. புள்ளிகளுக்கு ஒரு பள்ளி : இப்படியும் ஒரு கவிதை : புள்ளிகளுக் கெல்லாம் பொதுவாகச் சொல்லுகிறேன். எல்லாப் புள்ளிகளும் இணையானவையே! பெரும்புள்ளி சிறுபுள்ளி என்பதெல்லாம் வெறும் பெயரளவில் தான்...! இருக்கும் இடத்தை வைத்துத்தான் எந்தப் புள்ளிக்கும் மரியாதையோடு மதிப்புவந்து சேர்கிறது! புள்ளியெல்லாம் கூடி வளையாமல் கோலமாகுமா...? காற்புள்ளி அரைப்புள்ளி என்றெல்லாம் கதைக்காதீர்... எத்தனை எத்தனையோ சிறிய புள்ளிகள் சேர்ந்திருப்பதாலன்றோ ஒவ்வொரு பெரிய புள்ளியும் உருவாகின்றது...! தேவையில்லா இடத்தில் திரிந்தாலோ தெரிந்தாலோ புள்ளிகள் அடிபட்டுப் போகின்ற ஆபத்தும் இங்குண்டு...!