பக்கம்:பாட்டுத் திறன்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பாட்டுத் திறன் மமதையோடு இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் தன்னைத்தான் மையப் புள்ளியென்று மார்தட்டிக் கொண்டிருக்கும்...! எல்லாப் புள்ளிகளுக்கும் எல்லையென ஒன்றுண்டு. அதுவும் ஒரு புள்ளிதான்முடிவைத் தெரிவிக்கும் முற்றுப் புள்ளி...! இக்கவிதையில்" கவிஞர் மு. மேத்தா பல புள்ளிகளை உருவக மாகக் காட்டுகின்றார். அவை அரசியல் புள்ளிகளை, இறைச்சிப் பொருளாகக் காட்டுகின்றனவோ? 5. உழைப்பவர் உலகம்: இதுபற்றிப் பல்வேறு கோணங் . களில் பல்வேறு கவிதைகளைக் காண்கின்றோம். பட்டியின் ஆடுகள்’’’ என்ற தலைப்பில் உழைப்பவர் உலகத்தை ஒருகவிதை அற்புதமாகப் படைத்துக் காட்டுகின்றது. நாலு பக்கமும் வேலி கடுப்புறத்தில் சோலி... இதுதான் எங்கள் வாழ்வு;இந்த நாட்டின் முதுகெலும்பாக உளள் உழைப்பாளிக்கு அமைந்த வாழ்வு ஒருபக்கத்தில் ஆண்டவன் வேலி மறுபக்கத்தில் படிப்பாளி வேலி :முதல்வன்பேரால் மூடத்தனத்து முள்வேலி, காலாம் பக்கம் கிரந்தர வறுமை காட்டிய வேலி. உழைப்பாளர்களின் உண்மை கிலையைத் தெளிவாகக் காட்டு கின்றது கவிதை. 6 வறுமை இதனை நிலைபேறுடையதாகச் செய்தவர்கள் அரசியல் வாதிகளே என்று அனைவரும் ஒருமித்த குரலோடு பேசுகின்றனர். இப்படி ஒரு கவிதை : 11- ஆனந்தவிகடன். 80.8.87 42. சாலை இளந்திரயைன்: உரை வீச்சு:பக் 2: