பக்கம்:பாட்டுத் திறன்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் ვ?? வறுமையே! எங்கள் தேசத்து அரசியல் வாதிகள் வாங்கி வந்த வரப்பிரசாதமே உன்னை வருணிக்காதவனும் ஓர் அரசியல் தலைவனா? உன்னோடு வாழாதவனும் ஓர் இலக்கியப் புலவனா?" இந்த அரசியல் வாதிகள் ெ தாண்டர்கள் போல் நன்கு நடித்து ன்ெகர்கள் போல் பேரம் பேசுவதைக் கவிஞர் அம்பலப் படுத்து கின்றார். வறுமையை மூலதனமாக்கிக் கொண்டு பலர் வாழ்வதையும் பலகவிதைகள் சுட்டிக் காட்டாமல் இல்லை. வறுமையின் தத்துவம் சமய வாதிகளுக்குப் பிரசங்கத் தலைப்பு குருவி ஜோசியக் கானுக்கு வயிற்றுப் பிழைப்பு கலா சிருஷ்டியோடு எழுதுபவனுக்கு நிலாச் சோறு கல்லூரி மாணவனுக்கு-வெறும் பரிட்சைக் கேள்வி! ஆதிசிவனையே ஆண்டி' யாகப் பேசும் நமது காட்டில் வறுமையின் தத்துவம் ஏன் நிலைக்காது? 8 பல்வகை நோக்கு: இன்று பல புதுக்கவிஞர்கள் சமுதாய நோக்கில் கவிதைகள் எழுதுகின்றனர். தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி' என்ற கவிதையின் ஒரு பகுதி : 19. அரண்மனை திராட்சைகள்: 14. கண்ணிர்ப்பூக்கள்