பக்கம்:பாட்டுத் திறன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாட்டுத் திறன் கரன் இருந்த வனம் அன்றோ? இவைபடவும் கடவேனோ? அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!88 என்ற பாடலில் தன்கண் தோன்றிய அவலம் காண்க. சூர்ப்ப னகையின் நிலையைக் கண்டு அவளது கிலைக்கு ஒருவர் இரங்கு வதாக ஒரு பாடலை அமைத்தால் அது பிறன்கண் தோன்றிய அவலமாகும். தலைவன் தலைவியரது வடிவம், இளமை முதலியன உத்திபன விபாவம் ஆகும். அவை சுவை தோன்றற்குக் காரணங்கள். அவற்றின் காரியம் அதுபாவம்; அவற்றிற்குத் துணை செய்வன சஞ்சாரி பாவங்கள் என்பன; இவற்றையே வியபிசாரி பாவங்கள் எனவும் கூறுவர். அவை அரசனைப் பின் தொடரும் ஏவலர் போலவும், கடலிற் பிறக்கும் அலைகள் போலவும் ஸ்தாயி பாவங்களைப் புலப்படுத்தி கிற்கும். தொல் காப்பியத்தின் மெய்ப்பாட்டியலில் கூறப்பெற்ற உடைமை இன்புறல்' போன்றவை வியபிசாரி பாவங்களாகும். இவற்றை யெல்லாம் அறிந்துகொண்டு கவிதைகளைப் படித்தால் பாட்டது பவம் உயர்ந்த முறையில் ஏற்படும். கவிதையின் பல கூறு களுள் சுவை மிகவும் நுட்பமானது. கவிதை உண்மை: தமிழ்க் கவிதைகளைப் பொறுத்த மட்டிலும் கவிகை யுண்மைதான் கவிதைக்கு ஒர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று; அவன் கூறும் உண்மை எப்படியிருக்க வேண்டும் என்பதை உரைப்பது. பெரும்பாலும் ஊழின் வலியை ஆங்காங்கு எடுத்துரைக்கும் தமிழ்க் கவிதைகள் படிப்போது உள்ளத்தையே உருக்கி விடும்; உயர்ந்த கவிதை யநுபவமும் ஏற்படச் செய்து விடும். ஓரளுசு பேருளரால், அறந்த வாத உதிட்டிரனா தியருரகக் கொடியோன் ஆதி ஈரஞ்சு பதின்மருளர் தம்பி மார்கள் இங்கிதங்கள் அறிந்தடைவே ஏவல் செய்யப் 88. ஆரணிய சூர்ப்பண்கைப்-109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/42&oldid=812942" இலிருந்து மீள்விக்கப்பட்டது