பக்கம்:பாட்டுத் திறன்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 பாட்டுத் திறன் சொக்கட்டான்கள் பகடைகள் இனி உருளப்போவதில்லை. எம் ஒற்றுமையின் சமுத்திர ஆர்ப்பில் கதாயுதமும் காண்டிபமும் பிரளய கால சண்ட மாருதமாக உங்கள் கவசங்களை கொறுக்கத்தான் போகின்றன மீண்டும் குருட்சேத்திரம் சரித்திரத்தைச் சந்திக்கத்தான் போகின்றது கண்ணன் தரும் ஒளியால் இருட்டுக் கொப்புளங்கள் உடையத்தான் போகின்றன அவன் கையிலுள்ள புதுமைச் சக்கரம் பொதுவுடைமைச் சக்கரமாக ஏய்த்துக் கொழுத்த சுரண்டி வளர்த்த உங்களை உங்கள் உயர்வுக்கு வழிவகுத்த திட்டமிடும் சகுனிகளை மறைமுகமாக உங்களுக்கு உதவிவரும் ஏகாதிபத்தியங்களை மாயாவாத . தத்துவக் கறைபடிந்த கருத்துகளை : . அறுக்கத்தான் போகின்றன: பாரதத்தில் வரும் மரபுச்சொற்றொடர்கள் குறிக்கும் கருத்து களைக் குறியீடுகளாகக் கொண்டு-படிமங்களாகக் காட்டிவரும் யுகப் புரட்சியையே காட்டிவிடுகின்றது கவிதை மிக அறபுதமாக